search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electrical safety"

    • தேரோட்டத்தின்போது மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
    • தேர் கட்டுமானம் காய்ந்த மரக்கட்டைகளால் அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாளர் செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை ஊர்வலத்தின்போது தேரோட்டம், சப்பர பவனியை பாதுகாப்பான முறையில் நடத்திட பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

    தேரோட்டத்தின்போது வீதிகளில் மின்சாரத்தினை நிறுத்திடவும் தேரோட்டத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பிகளை அகற்றி பாதுகாப்பான தேரோட்டம் நடைபெறுவதை உறுதி செய்யவும் முன்னதாகவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தை அணுகி உரிய முன்னேற்பாடு செய்து கொள்ள வேண்டும். தேர் அல்லது சப்பரத்தில் ஜெனரேட்டர் மூலம் அலங்கார விளக்குகள் அமைத்தால் ஜெனரேட்டர் மெயின் போர்டில் தகுந்த மின்கசிவு தடுப்புகருவி பொருத்தி சீரியல் விளக்குகள் மற்றும் அலங்கார விளக்குகளுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும்.

    தேர் அமைக்கும்போது உலோகத்தினால் ஆன கட்டுமானத்திற்கு பதிலாக காய்ந்த மரக்கட்டைகளால் கட்டுமானம் அமைப்பது பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் தேரின் உயரமானது அதன் அடிப்பாகத்தின் நீல அகலத்திற்கு தகுந்தாற்போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தேரோட்டத்தின்போது தீயணைப்பு மற்றும் முதலுதவி போன்ற அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள வேண்டும்.

    இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துக்களை தடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×