என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharshan"

    • படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
    • அனுபவ நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார் லால்.

    கதைக்களம்

    நாயகன் தர்ஷன் பயிற்சி எஸ்.ஐ.ஆக புறநகர் காவல் நிலையமான திருமழிசை ஸ்டேஷனில் பணிக்கு சேர்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடக்க 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தனது கைத்துப்பாக்கியை போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டர் லாலிடம் கொடுத்து வைக்கிறார். அந்த கைத்துப்பாக்கி ஸ்டேஷனில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போகிறது.

    அதே சமயம் தாதாவான சுஜித்சங்கரிடம் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்யும்படி பல கோடிகள் கொடுக்கப்படுகிறது. அந்தப் பணத்தை அவருடைய ஆட்கள் தொலைத்துவிடுகிறார்கள். துப்பாக்கியைத் தேடி தர்ஷனின் குழுவும் பணத்தைத் தேடி தாதா குழுவும் செல்லும் போது ஒரு புள்ளியில் சந்தித்து மோதிக்கொள்கிறார்கள்.

    இறுதியில் காணாமல் போன துப்பாக்கி தர்ஷனுக்கு கிடைத்ததா? தாதாவுக்கு பணம் கிடைத்ததா? தர்ஷனும், தாதா சுஜித்தும் எதற்காக மோதிக் கொண்டார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். படம் முழுவதும் மிடுக்கான தோற்றத்தால் கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லனாக நடித்து இருக்கும் சுஜித், மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அனுபவ நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார் லால். குறிப்பாக வில்லன் குடோனில் இவரை அடைத்து வைக்கும் காட்சியில் நெகிழ வைத்து இருக்கிறார்.

    கதாநாயகியாக நடித்து இருக்கும் பாடினி குமார், போலீசாக வரும் ரம்யா ராமகிருஷ்ணன், அருள் டி சங்கர், முனீஸ் காந்த் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் கணபதி. தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா, துப்பாக்கி காணாமல் போவதை திரைக்கதையாக வைத்து இயக்கி இருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முனீஸ் காந்த் காமெடி டிராக்கை கொஞ்சம் சுவாரசியமாக கொடுத்து இருக்கலாம்.

    இசை

    இசையமைப்பாளர் விகாஸ் படிஷாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். பல காட்சிகளை இவருடைய இசை தாங்கி பிடித்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    மெய்யேந்திரனின் ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

    தயாரிப்பு

    Upbeat Pictures தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது

    ரேட்டிங் - 3/5

    • அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார்.
    • சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் நடித்த கதாப்பாத்திரம் மூலம் கவனிக்கப்படும் நடிகர் ஆனார்.

    கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார்.

    அடுத்ததாக தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தை SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

    இந்நிலையில், ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

    அதன்படி, ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • திருவிழா பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 12 அம்மன் கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு சப்பர பவனி தொடங்கியது.

    நெல்லை:

    குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்த படியாக பாளையில் நடைபெறும் தசரா திருவிழா சிறப்பு பெற்றது.

    12 அம்மன் கோவில்கள்

    இந்த ஆண்டு திருவிழா பாளை ஆயிரத்தம்மன் கோவிலில் கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பாளையில் உள்ள 12 அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெற்றது.

    ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், முப்பிடாதி அம்மன், யாதவர், விஸ்வகர்மா, கிழக்கு உச்சினி மாகாளி அம்மன், தேவி உலகம்மன், புது உலகம்மன், பேராத்து செல்வி அம்மன் உள்ளிட்ட 12 அம்மன் கோவில்களிலும் தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார்.

    சப்பர பவனி

    விஜயதசமியையொட்டி 12 அம்மன் கோவில்களிலும் கடந்த 5-ந் தேதி நள்ளிரவு சப்பர பவனி தொடங்கியது. 12 அம்மன் சப்பரங்களும் பல்வேறு தெருக்களில் வலம் வந்து பெருமாள், சிவன் உள்ளிட்ட 8 ரத வீதிகளிலும் காட்சி கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து நேற்று காலை 12 அம்மன் சப்பரங்களும் பாளை ராமசாமி கோவில் திடலுக்கு வந்தது. பின்னர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு ராஜகோபால சுவாமி கோவில் திடலை அடைந்தது. தொடர்ந்து சிவன் கோவில் பகுதியில் சென்று மாலையில் மார்க்கெட் எருமை கிடா மைதானத்தில் 12 சப்பரங்களும் அணிவகுத்து நின்றன.

    சூரசம்ஹாரம்

    இன்று அதிகாலை வரை ஒவ்வொரு சப்பரங்களாக அணிவகுக்க தொடங்கியது. இதைத்தொடர்ந்து 3 மணிக்கு மாரியம்மன் கோவிலின் எதிரில் 12 சப்பரங்கள் புடைசூழ ஆயிரத்தம்மன் மகிஷா சூரனை சூரசம்ஹாரம் செய்தார். இதனை ஏராள மான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.

    சூரசம்ஹாரத்தை யொட்டி பாளை பகுதியில் மின் ஊழியர்கள் முன் எச்சரிக்கை நடவடிக் கையாக மின்தடை செய்தனர்.

    நெல்லை சந்திப்பு

    நெல்லை சந்திப்பு மேல வீரராகவபுரத்தில் பழமை வாய்ந்த அம்மன் கோவில்களான கண்ணம்மன் கோவில், புது அம்மன் கோவில் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி விழா கடந்த 26-ம் தேதி தொடங்கி 11 நாட்கள் விமர்சையாக சிறப்பு பூஜைகளுடன் பல்வேறு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருள நடைபெற்றது.

    இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தசரா திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் அலங்காரம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் ஸ்ரீ கண்ணம்மன், புது அம்மன் மற்றும் முத்துமாரியம்மன் தாமிரபரணி நதிக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து வீதி உலா நடைபெற்றது. 3 சப்பரங்களும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சேர பக்தர்களுக்கு காட்சி தந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தச்சநல்லூர்

    இதற்கிடையே தச்ச நல்லூர் சந்தி மறித்தம்மன் கோவில் முன்பு இன்று 7 அம்மன் கோவில் சப்பரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இன்று இரவு அங்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருப்பதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். #edappadipalaniswami #tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் சேலத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் வழியாக கார்மூலம் திருமலைக்கு வந்தார்.

    திருப்பதிக்கு வந்த அவரை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு திருப்பதி ஆர்.டி.ஓ. கனக நரசாரெட்டி, துணை செயல் அலுவலர் பாலாஜி, ஏ.எஸ்.பி. முரளி கிருஷ்ணா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர், ஆந்திர மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இரவில் வராக சுவாமி ஹயக்ரிவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



    திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவில் தங்கினார். இன்று அதிகாலை அஷ்டதள பாதபத்ம ஆராதனை சேவையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது குடும்பத்தினருடன் சென்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தார்.

    ரங்கநாயகர் மண்டபத்தில் வைத்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு பிரசாதம் மற்றும் சாமி படங்களை வழங்கினர். #edappadipalaniswami #tirupati
    ×