தர்ஷன் நடிக்கும் "House Mates" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார்.சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
தர்ஷன் நடிக்கும் "House Mates" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கனா'. அருண்ராஜா காமராஜ் இயக்கிய 'கனா' திரைப்படத்தில் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தர்ஷன் நடித்த கதாப்பாத்திரம் மூலம் கவனிக்கப்படும் நடிகர் ஆனார்.

கனா திரைப்படத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திலும் தர்ஷன் நடித்து இருந்தார்.

அடுத்ததாக தர்ஷன், இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் ப்ளேஸ்மித் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தை SK ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

இந்நிலையில், ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com