search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி - வினா போட்டி
    X

    கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்


    கோவில்பட்டியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி - வினா போட்டி

    • கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு வினாடி - வினா போட்டி நடைபெற்றது.
    • தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான வினாடி - வினா போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு பேராசிரியர் சுரேஷ்பாண்டி தலைமை தாங்கினார். கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பாலு, தமிழ்நாடு அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஞ்ஞானத் துளிர் பொறுப்பாசிரியர் பாலகிருஷ்ணன் வினாடி - வினா போட்டியை தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநிலச் செயலர் பரமசிவம், ஜெய் கிரிஸ்ட் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், சமூக ஆர்வலர் செண்பகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 160-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழி கல்வி மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது.

    வினாடி - வினா போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணியினர் திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். விழாவில் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டிப் பேசினார். இதில் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றியச் செயலர் அன்புராஜ், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×