என் மலர்
உள்ளூர் செய்திகள்

அம்பாளுக்கு பூஜை நடைபெற்ற காட்சி
கோவில்பட்டி புற்றுக்கோவிலில் கேதார கவுரி விரத பூஜை
- சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கேதார கவுரி விரத பூஜை நடைபெற்றது.
- அம்பாளுக்கு விரத நோன்பு சரடு, பழ வகைகள், இனிப்புகள் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் கேதார கவுரி விரத பூஜை நடைபெற்றது.
இதனையொட்டி காலை 6 மணிக்கு நடை திறக்கபட்டு விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் சுவாமி அம்பாள் உற்சவர் ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு கேதார கவுரி விரத பூஜை நடைபெற்றது. அம்பாளுக்கு விரத நோன்பு சரடு, பழ வகைகள், இனிப்புகள் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மேலும் வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகனுக்கு முதல் நாள் சஷ்டி விரத சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு விரத சரடு வளையல், இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவி நாராயணன், கணேஷ் குமார், ஆனந்தவள்ளி ஆகியோர் செய்தனர்.