என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archery Womens"

    • காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அம்பு எய்வார்.
    • போகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டார்.

    தென் கொரியாவின் குவான்ஜு நகரில் நடந்து வரும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஷீத்தல் தேவி (18 வயது) வரலாறு படைத்துள்ளார்.

     இன்று(சனிக்கிழமை) நடந்த பெண்களுக்கான காம்பவுண்டு ஒற்றையர் பிரிவில் துருக்கியை சேர்ந்த உலகின் நம்பர் 1 சாம்பியன் ஓஸ்நுர் குரே கிர்டி -ஐ 146-143 என்ற கணக்கில் வீழ்த்தி ஷீத்தல் தேவி தங்கம் வென்றார்.

     உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் கைகள் இன்றி தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையை ஷீத்தல் தேவி படைத்துள்ளார்.  

    முன்னதாக நேற்று, பெண்களுக்கான காம்பவுண்டு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியா சார்பில் ஷீத்தல் தேவி, சரிதா ஜோடி, 'நம்பர்-1' இடம் பிடித்த பிரிட்டனின் போபே பைன், ஜெசிக்கா ஜோடியை 152-150 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    போகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை நோயால் கைகள் இன்றி பிறந்த ஷீத்தல் தேவி, காலால் வில்லை உயர்த்தி, தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அவர் அம்பு எய்வதில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் இந்திய பெண்கள் வில்வித்தை அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. #AsianGames2018 #IndianArcheryWomen
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப்போட்டித் தொடரில் இன்று வில்வித்தை பிரிவில் இறுதிச்சுற்று நடைபெற்றது.

    பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்திய அணியும், தென்கொரிய அணியும் மோதின. இதில், இந்திய அணி  228-231 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய அணியில் கிரார் முஷ்கன், குமாரி மதுமிதா, வென்னம் ஜோதி சுரேகா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



    இந்த போட்டியின் முடிவில், இந்தியா 8 தங்கம், 14 வெள்ளி, 20 வெண்கலம் என 42 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. #AsianGames2018 #IndianArcheryWomen
    ×