search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீர்காழி பள்ளி மாணவர்கள்
    X

    சீர்காழி ெரயில் நிலையத்தில் தங்கப்பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கைப்பந்து போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீர்காழி பள்ளி மாணவர்கள்

    • கைபந்தாட்ட போட்டியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
    • ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    கடற்கரை கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.

    19 வயது பிரிவில் ஆண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கோகுலன், அரிஷ் குமார், ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

    இதேபோல் 17 வயது பெண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட பாவனா, பிரியதர்ஷினி இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.

    இதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனர்கள் பிரவின் வசந்த்ஜபேஷ், அனுஷாமேரி, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா, குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் அபிரகாம் மற்றும் பெற்றோர்கள் ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து திறந்த வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ, மாணவிகளை கோப்பைகளுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    பள்ளியில் அனைத்து மாணவ, மாணவகளும் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் போது பரஞ்ஜோதி ஜூவல்லரி பழனியப்பன், ஆங்கில ஆசிரியர் ரெங்கநாதன் உடனிருந்தனர்.

    Next Story
    ×