டேக்வாண்டோ போட்டியில் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் வென்று சாதனை

டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாராட்டினார்.
மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டிய காட்சி.
மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டிய காட்சி.
Published on

திருப்பூர் :

மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

தமிழக மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், பிரன்ட்லைன் பள்ளி மாணவ ர்கள் பங்கேற்று தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். குழு பிரிவில், மாணவர் சந்திரேஷ் தங்கமும், ஒற்றையர் பிரிவில், ரிஸ்வான்ட் வெண்கலம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com