என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமன்வெல்த் 2030"

    • மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரவை பரிந்து செய்திருந்தது.
    • அகமதாபாத் போட்டியை நடத்த சிறந்த இடமாக இருக்கும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது.

    மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறையின் பரிந்துரையை ஏற்று, 2030 காமன்வெல்த் போட்டியை நடத்த விண்ணப்பம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிதுள்ளது.

    பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு, குஜராத் மாநிலம் அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த சிறந்த இடமாக இருக்கும். அங்கு உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள், பயிற்சி வசதிகள், விளையாட்டு கலாசார பேரார்வம் உள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

    ஒருவேளை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, போட்டியை நடத்தும் உரிமையை பெற்றால், குஜராத் அரசுக்கு உதவக்குடிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

    ஆகஸ்ட் 31ஆம் தேதி விண்ணப்பம் செய்ய கடைசி நாளாகும். இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்னும் 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து நடைமுறைகளை நிவர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கடைசியாக 2010ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்தியது.

    கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் கடைசி வாரம் நடைபெற இருக்கும் காமன்வெலத் போட்டிக்கான பொதுக்கூட்டத்தில் போட்டியை நடத்தும் நாடு தேர்வு செய்யப்படும். பட்ஜெட் விவகாரம் தொடர்பாக கனடா போட்டியை நடத்துவதில் இருந்து பின்வாங்கியுள்ளது. இதனால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

    2036 ஒலிம்பிக் போட்டியையும் நடத்த இந்தியா தீவிராக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அகமதாபத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் பல்வேறு வசதிகள் உள்ளன. உள்அரங்கம் போட்டி நடத்துவதற்கான இரண்டு இடங்கள் உள்ளன. கால்பந்து போட்டி நடத்துவதற்கான இடமும் உள்ளது.

    மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்போர்ட்ஸ் என்கிளேவ் முக்கிய மைதானமாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காமன்வெல்த் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்வார்கள். 

    • இந்தியா இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
    • 2036-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    டெல்லி:

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்

    2030 காமன்வெல்த் தொடரை இந்தியாவில் நடத்துவதற்கான முயற்சிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போட்டிகளை நடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் தொடரை நடத்த கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், திடீரெனப் போட்டியிலிருந்து விலகியது. இது இந்தியாவுக்குப் காமன்வெல்த் தொடரை நடத்தும் வாய்ப்பை அதிகரித்தது.

    இந்தியா இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் தொடரை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரம்மாண்ட விளையாட்டு தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

    2036-ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரை நடத்தும் முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    ×