என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "law student"

    • சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கைதான மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த வழக்கில் மனோஜித் மிஸ்ரா, ப்ரோமித் முகர்ஜி, ஜெயித் அகமது, காவலாளி பினாகி பானர்ஜி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் முன்னாள் தலைவர் மற்றும் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவருக்கு இப்போது கட்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் மனோஜித் மிஸ்ரா பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 31 வயதான அவர் பெண்களிடம் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டவர் என கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 2021-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் எந்த பெண்களை பார்த்தாலும் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என பலமுறை தொல்லை கொடுத்து சைக்கோ போல நடந்து வந்துள்ளார்.

    மேலும் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து நண்பர்களுக்கு பரப்பும் கொடூர மனம் படைத்தவராக இருந்துள்ளார். பெண்களை உடல் ரீதியாக அவமானப்படுத்துவது, தாக்குவது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற மோசமான நடத்தைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மனோஜித் மிஸ்ராவின் முன்னாள் நண்பராக இருந்த டைட்டாஸ் என்பவர் கூறுகையில், 2013-ம் ஆண்டு மனோஜித் ஒரு கேட்டரிங் தொழிலாளியின் விரலை வெட்டினார். இது தொடர்பாக அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கிற்கு பிறகு அமைதியாக காணப்பட்ட அவர் 2016-ம் ஆண்டு மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் 2017-ம் ஆண்டு மீண்டும் மாணவர் பிரிவில் சேர முயன்ற போது அவரது குற்ற பின்னணி காரணமாக கட்சி தலைவர்கள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர்.

    பின்னர் 2017-ம் ஆண்டு டிசம்பரில் மனோஜித் மிஸ்ரா 40 ஆதரவாளர்கள் கொண்ட ஒரு கும்பலுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்து மாணவர்கள் சங்க உறுப்பினர்களை தாக்கி பணம் பறித்தார் என கூறப்படுகிறது.

    இதுபோன்று மனோஜித் மிஸ்ரா பற்றி அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை 2 பேர் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்லூரிக்குள் இழுத்து செல்வது போன்ற சி.சி.டி.வி. காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார்.
    • மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உள்ளார். அந்த மாணவியை 3 மாணவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் ஆவார். மாணவியை கல்லூரிக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொல்கத்தாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

    திருவொற்றியூரில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் சட்டக்கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் பகுதி கோபி நகரை சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் அஸ்வினி (வயது 20). இவர் சென்னை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், நாகை மாவட்டம் வேதாரண்யம் செட்டிபுலத்தை சேர்ந்த தென்னவன் (25) என்பவரும் ‘பேஸ்புக்’ மூலம் பழக்கமாகி காதலித்து வந்தனர்.

    தென்னவன், சென்னை பூந்தமல்லியில் தங்கி அண்ணா நகரில் உள்ள பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 3-ந் தேதி அஸ்வினி வீட்டில் அனைவரும் கேரளாவுக்கு சென்று விட்டனர்.

    அஸ்வினி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். காதலன் தென்னவனை தன் வீட்டுக்கு அவர் வரவழைத்துள்ளார். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு தென்னவன் பரிதாபமாக இறந்து போனார்.

    சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காதலன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்ட அஸ்வினியை திருவொற்றியூர் சக்திபுரத்தில் உள்ள உறவினர் ராமச்சந்திரன் என்பவரது வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார். வீட்டில் அஸ்வினி மட்டும் தனியாக இருந்தார். இரவு வீடு திரும்பிய உறவினர்கள் கதவை தட்டினர்.

    ஆனால் வெகுநேரமாக கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அஸ்வினி தூக்கில் தொங்கியபடி கிடந்தார். உடனே கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்த அஸ்வினியை கீழே இறக்கி அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அஸ்வினி தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
    ×