என் மலர்
இந்தியா

மக்களவை தலைமை கொறடா பதவியை ராஜினாமா செய்தார் மம்தா கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி
- எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது.
இந்திய பாராளுமன்ற மக்களவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடாவாக கல்யாண் பானர்ஜி எம்.பி. இருந்து வந்தார். இன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
"எம்.பி.க்களிடம் சரியான ஒத்துழைப்பு இல்லை என் மீது குற்றம்சாட்டப்பட்டது. தன் மீது நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது. சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு அரிதாகவே வருகை தருகின்றனர். இதனால் எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்" என கல்யாண் பானர்ஜி எம்.பி. தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஸ்ரீராம்பூரிலிருந்து நான்கு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மூத்த வழக்கறிஞருமான கல்யாண் பானர்ஜி, கட்சி ஒழுக்கமின்மை மற்றும் மோசமான வருகைக்கு காரணமானவர்களை பொறுப்பேற்க வைக்காமல், தன்னை வீழ்ச்சியடையச் செய்ததற்காக அவமானப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Next Story






