என் மலர்
இந்தியா

13 வயது மகளை காதலன் மற்றும் உதவியாளருக்கு பாலியல் இரையாக்கிய பாஜக பெண் தலைவர் கைது
- சிறுமியின் தாயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள உள்ளூர் பாஜக பெண் தலைவர் ஒருவர் தனது காதலனும் அவரது உதவியாளரும் தனது 13 வயது மகளை பலமுறை கண்முன்னே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.
சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாஜக தலைவர் அனாமிகா சர்மாவும் அவரது காதலன் சுமித் பட்வாலும் ஹரித்வாரில் உள்ள ஹோட்டலில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
பட்வாலின் கூட்டாளியான சுபம் மீரட்டின் ஷாபூரில் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. சிறுமி தனது தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றிக் கூறியதைத் தொடர்ந்து, அவர் போலீசில் புகார் அளித்தார்.
அனாமிகா முன்பு பாஜக மகிளா மோர்ச்சாவின் ஹரித்வார் மாவட்டப் பிரிவின் தலைவராக இருந்தார். இருப்பினும், இந்த வழக்கில் அவரது பெயர் எழுந்தவுடன், அவர் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் ஹரித்வார், ஆக்ரா மற்றும் பிருந்தாவனில் சிறுமி பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சிறுமியின் தயான அனாமிகா சம்மதத்துடனும், அவரது முன்னிலையிலும், அந்த நபர்கள் இந்தக் குற்றத்தைச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், சிறுமியின் தந்தையை யாரிடமாவது இதை வெளிப்படுத்தினால் கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.
அனாமிகா தனது கணவரிடமிருந்து பிரிந்து தனது காதலனுடன் அவரது ஹோட்டலில் வசித்து வந்தார். அதே நேரத்தில் அவரது மகள் தனது தந்தையுடன் வசித்து வந்தார்.






