பல்லடம் அருகே கிணற்றில் பிணமாக கிடந்த பள்ளி மாணவி

அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மசநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தின் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தேடியதில் கிணற்றில் வைஷ்ணவியின் உடலை கண்டுபிடித்து மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி வைஷ்ணவி உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com