என் மலர்
நீங்கள் தேடியது "ஏஐ தொழில் நுட்பம்"
- அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.
- உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள்.
மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடு காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் கொண்டு வருகிறார்.
அவர் ஆட்சி அமைத்து 16 மாத காலத்திற்குள் ரூ. 1.50 லட்சம் கோடிக்கு மேலான முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு கிடைத்துள்ளன. அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.
இந்தநிலையில் விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது.
அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
உலகளவில் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் இந்த பிரம்மாண்ட முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள். மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் முக்கிய துறைகளில் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் நிபுணர்கள். கிளவுட் ஆர்கிடெக்ட்கள், சைபர் பாதுகாப்பு. தரவு தனியுரிமை நிபுணர்கள் மற்றும் தரவு மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தேவை அதிகரிக்கும்.
நெட்வொர்க் உபகரணங்கள் சேமிப்பக அமைப்பு நிறுவல் பராமரிப்பு மற்றும் சரிசெய்தல்.. நிபுணர்கள் பல்வேறு துறைகளில் 24 நேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் வேலை வாய்ப்பு பெருகும்.
ஆந்திராவில் ஏஐ கண்டுபிடிப்புகள் துரிதப்படுத்தப்படும். இதன் மூலம் ஆந்திரா மட்டுமின்றி தென்னிந்திய வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு அடித்தளம் அமைத்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத் பெருநகரத்தை ஹைடெக் சிட்டியாக சந்திரபாபு நாயுடு மாற்றினார். அதேபோல விசாகப்பட்டினத்தையும் மாற்றி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.
- மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
- மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
ராமேசுவரம்:
உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் அனைவரையும் வரவேற்றார்.
இது குறித்து பள்ளி முதல்வர் ஷாலினி பில்லி கிரஹாம் கூறியதாவது.:- மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏ.ஐ. ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவே பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ரோபோடிக் ஆசிரியை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார்கள் முரளிதரன், அப்துல் ஜபார், டி.ஆர்.ஓ. நேர்முக உதவியாளர் சாமிநாதன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மீனவ பிரதிநிதி சேசுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு ரோபோட்டிக் ஆசிரியை பதில் அளித்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
- பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார்.
ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கருவிகள் பல துறைகளிலும் புகுந்துவிட்டது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பல முன்னேற்றங்கள் உள்ளது. அதே நேரத்தில் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட ஆண் ரோபோ, நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பெண் தொகுப்பாளருக்கு தொல்லை கொடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நிகழ்ச்சியின் போது பெண் தொகுப்பாளர் ரோபோ குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த ரோபோ பெண்ணை நோக்கி கையை நீட்டி தகாத முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறது. ரோபோவின் செயலை உணர்ந்த பெண் தொகுப்பாளர் ரோபோவை நோக்கி கையை உயர்த்துகிறார். அதன்பிறகு ரோபோ அந்த செயலை நிறுத்துவது போன்று காட்சிகள் வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகி 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் ரோபோவின் செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
- இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகவே அமையும்.
நந்தம்பாக்கம்:
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும் Umagine TN தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* AI தான் இன்று பல இடங்களில் பேசுபொருளாக உள்ளது. இந்த தொழில் நுட்பம் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகதான் செய்யும். AI தொழில்நுட்ப வளர்ச்சியால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இந்த நேரத்தில் இந்த மாநாடு அவசியமே.
* வணிகத்தையும், தொழில்நுட்பத்தையும் எப்போதும் ஊக்குவிக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது.
* புத்தாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் அரசு செயல்படுகிறது.
* இன்னும் கூடுதலான வளர்ச்சியை நோக்கி தமிழகம் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
* எத்தனை வளர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டாலும் மேலும் வளர்ச்சி தேவை என்பது தான் எனது எண்ணம். உண்மையான வளர்ச்சி என்பது சமச்சீரானதாக இருக்க வேண்டும்.
* ஐ.டி துறை வளர மனித வளம் என்பது மிகவும் முக்கியமானது.
* 2-ம் கட்ட, 3-ம் கட்ட நகரங்களில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* தொழில் சார்ந்த திறன்களை வளர்க்க 'நான் முதல்வன் திட்டம்' மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. நான் முதல்வன் திட்டத்தால் நம் மாநில இளைஞர்களின் Soft Skills வளர்ந்துள்ளது.
* தமிழ் மென்பொருள் உருவாக்க மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
* மாநிலத்தின் அனைத்து திட்டங்களும் இணையதத்தில் வழங்கப்பட வேண்டும். அதனால் மக்கள் பயனடைவர்.
* இணைய சேவை எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறோம்.
* சைபர் பாதுகாப்பிற்கும் தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
* சைபர் செக்யூரிட்டி, இணையத்தில் தமிழ் வழிக்கல்வி, தமிழ் வழி தேடுதலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* பல்வேறு திட்டங்கள் மூலம் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
* இனி மக்களின் எல்லா பயன்பாடுகளும் டிஜிட்டல் வழியாகவே அமையும்.
* டிஜிட்டல் குற்றங்களை தடுக்க புதிய தொழில்நுட்பங்களை வடிவமைக்க வேண்டும் என்றார்.
- ஒரே மாதத்தில் 50 நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார்.
- தூங்கும் போது அனைத்து கடினமான பணிகளையும் AI முடித்ததுதான் சிறப்பம்சம் என்றார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப காலக்கட்டத்தில் சமீபகாலங்களில் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அமோக வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த AI தொழில்நுட்பம் பலரின் வேலையை பறித்துவிடும் என்ற அச்சம் இருந்து வருகிறது. எனினும், இந்த தொழில்நுட்பம் பலருக்கு ஏராள நன்மையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருவர் 1000 வேலைகளில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளார். இவை அனைத்தும் அவர் தூங்கும் நேரத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ஒரே மாதத்தில் 50 நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ரெடிட் இணையத்தில் கூறியிருப்பதாவது:- வீட்டில் தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு பாட்-ல் பெரிய வேலைகளும் எளிதாகிறது. தூங்கும் போது அனைத்து கடினமான பணிகளையும் AI முடித்ததுதான் சிறப்பம்சம் என்றார்.
AI விண்ணப்பங்கள் எழுதுவதற்கும், லெட்டர், அறிக்கைகள், வேலைக்காக விண்ணப்பிக்க என பல்வேறு முறைகளில் உதவுகிறது.






