என் மலர்tooltip icon

    இந்தியா

    கூகுள் ஏஐ தொழில்நுட்ப மையம்- விசாகப்பட்டினத்தை ஹைடெக் சிட்டியாக மாற்றும் சந்திரபாபு நாயுடு
    X

    கூகுள் ஏஐ தொழில்நுட்ப மையம்- விசாகப்பட்டினத்தை ஹைடெக் சிட்டியாக மாற்றும் சந்திரபாபு நாயுடு

    • அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.
    • உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள்.

    மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது எதை வேண்டுமானாலும் சாதிக்கக்கூடிய இடத்தில் இருக்கும் சந்திரபாபு நாயுடு காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஆந்திர மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் கொண்டு வருகிறார்.

    அவர் ஆட்சி அமைத்து 16 மாத காலத்திற்குள் ரூ. 1.50 லட்சம் கோடிக்கு மேலான முதலீடுகள் ஆந்திர மாநிலத்திற்கு கிடைத்துள்ளன. அமராவதி, விசாகப்பட்டினத்தை தலைசிறந்த நகராக மாற்றுவதில் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்தநிலையில் விசாகபட்டினத்தில் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையத்துடன் கூடிய, செயற்கை நுண்ணறிவு மையம் 15 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம் கோடி) முதலீட்டில் அமைகிறது.

    அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

    உலகளவில் கிளவுட் சேவைகள் மற்றும் ஏஐ உள்கட்டமைப்புக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், கூகுளின் இந்த பிரம்மாண்ட முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    உலகத்தரம் வாய்ந்த ஏஐ நிபுணர்கள் இங்கு பயிற்சி பெறுவார்கள். மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் முக்கிய துறைகளில் நிபுணர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் நிபுணர்கள். கிளவுட் ஆர்கிடெக்ட்கள், சைபர் பாதுகாப்பு. தரவு தனியுரிமை நிபுணர்கள் மற்றும் தரவு மைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தேவை அதிகரிக்கும்.

    நெட்வொர்க் உபகரணங்கள் சேமிப்பக அமைப்பு நிறுவல் பராமரிப்பு மற்றும் சரிசெய்தல்.. நிபுணர்கள் பல்வேறு துறைகளில் 24 நேரமும் பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் வேலை வாய்ப்பு பெருகும்.

    ஆந்திராவில் ஏஐ கண்டுபிடிப்புகள் துரிதப்படுத்தப்படும். இதன் மூலம் ஆந்திரா மட்டுமின்றி தென்னிந்திய வளர்ச்சிக்கு சந்திரபாபு நாயுடு அடித்தளம் அமைத்துள்ளார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது ஐதராபாத் பெருநகரத்தை ஹைடெக் சிட்டியாக சந்திரபாபு நாயுடு மாற்றினார். அதேபோல விசாகப்பட்டினத்தையும் மாற்றி வருகிறார் என தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×