மாநில தடகள போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது.மாநில தடகள போட்டிக்கு எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் தேர்வாகினர்.
மாநில தடகள போட்டிக்கு பள்ளி மாணவிகள் தேர்வு
Published on

அருப்புக்கோட்டை

விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 100 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திரிசாள் (9-ம் வகுப்பு) மாணவி மோனிகா (9-ம் வகுப்பு) ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடமும், மாணவி கீர்த்தனா மாவட்ட அளவில் 2-ம் இடமும் பெற்று கேடயமும், சான்றிதழும் பரிசாக பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

இந்த 3 மாணவிகளும் மாநில அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தடகள போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவிகளையும், உடற்பயிற்சி ஆசிரி யைக ளையும், அருப்புக்கோட்டை நாடார் உறவின்முறை தலைவர் காமராஜன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, பள்ளிச் செயலாளர் ராமச்சந்திரன், பள்ளித் தலைவர் ஜெய வேல்பாண்டியன் பள்ளி உதவி செயலாளர் காசிகோபிநாத், பள்ளி உதவி தலைவர் அஜய், தலைமையாசிரியை தங்கரதி மற்றும் உறவின்முறை பெரியோர்கள் ஆசிரியர்கள் மாணவ-மாணவி கள் பாராட்டினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com