என் மலர்
நீங்கள் தேடியது "car crash"
- இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பண்ட் இடம்பெறவில்லை.
- பண்ட் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என விவிஎஸ் லஷ்மண் கூறியுள்ளார்.
இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் உத்தரகண்ட் மாநிலம் ரூர்க் பகுதி அருகே கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் ட்விட்டரில் இதுகுறித்து கூறுகையில், பண்ட் ஆபத்தில் இருந்து வெளியேறிவிட்டார். ஆனால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது இன்னும் தெரியவில்லை.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில், பண்ட் டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

25 வயதான பண்ட் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கார் மோதி முதியவர் பலியானார்.
- விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
அரியலூர்: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கோமான் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையன்(வயது 65). அதே பகுதியை சேர்ந்தவர் சுருதிமன்னன் (50). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருச்சி- சிதம்பரம் சாலையில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கருப்பையன் உயிரிழந்தார். சுருதிமன்னன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கரூர் மாவட்டம் வச்சேரி கிராமத்தை சேர்ந்த ஆசைத் தம்பி மகன் கிருபா(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ்
- இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 42). இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
களக்காட்டை அடுத்த மேல சாலைப்புதூர் அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி ஸ்ரீதேவி மீது மோதியது.
பின்னர் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார்.
- திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பல்லடம் :
பல்லடம் - பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சின்னூர் பிரிவு அருகே, பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரமாக இருந்த புளியமரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் அவர் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த கிட்டுசாமி மகன் முருகேசன்( வயது 37) என்பது தெரியவந்தது . இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.
- தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
காங்கயம் :
திருப்பூா் வீரபாண்டி, சபாபதி நகரை சோ்ந்தவா் முருகானந்தம் (வயது 66). இவா் திருப்பூா் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள ஒரு நிறுவனத்தில் காா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் கரூருக்கு காரில் சென்றுள்ளாா். காங்கயம் தாலுகா, சிவன்மலை அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியில் செல்லும்போது, காா் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் முருகானந்தம் காருக்குள் சிக்கிக் கொண்டாா்.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினா் முருகானந்தத்தை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சீனாவின் ஹூபே மாகாணம் ஜாவ்யாங் நகரில் இன்று அதிகாலை பொதுமக்கள் சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார், திடீரென பொதுமக்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பொதுமக்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அப்போதும் காரை ஓட்டிய நபர், காரை நிறுத்தவில்லை.
இதையடுத்து போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் காருக்குள் இருந்த நபர் கொல்லப்பட்டார். கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சீனாவில், தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் கோபத்தை பொதுமக்கள் மீது காட்டும் போக்கு சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நபர் சொகுசு காரை பொதுமக்கள் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 43 பேர் காயமடைந்தனர். சில நபர்கள் தங்கள் தனிப்பட்ட ஆத்திரம் மற்றும் மனரீதியிலான அழுத்தங்களால் கத்தி தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இவர்கள் குறிப்பாக பள்ளிக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சென்று தாக்குதல் நடத்துகின்றனர். #ChinaAttack #ChinaCarCrash

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97), ஓட்டி சென்ற கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பியபோதும், விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது. அவரது தோழியும் காயம் அடைந்தார்.
மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்ததோடு, இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் இளவரசர் பிலிப் மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக இளவரசர் பிலிப் எழுதிய கடிதத்தில், “விபத்தில் என்னுடைய பங்குக்காக நான் மன்னிப்பு கோருகிறேன். விபத்தின் விளைவுகளை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். மோசமான இந்த அனுபவத்தில் இருந்து நீங்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். #PrincePhilip #ApologyLetter
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) கடந்த 17-ந் தேதி கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சான்ட்ரிங்காம் எஸ்டேட்டுக்கு தனது சொகுசு காரில் சென்றபோது, அவரது கார், மற்றொரு கார் மீது மோதியது.
இதில் இளவரசர் பிலிப் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் விபத்தில் சிக்கிய மற்றொரு காரை ஓட்டிச்சென்ற பெண்ணின் மணிக்கட்டு உடைந்தது.
அவரது தோழியும் காயம் அடைந்தார். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மணிக்கட்டு உடைந்த அந்த பெண், விபத்து தொடர்பாக இளவரசர் தன்னிடம் மன்னிப்பு கூட கேட்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் கார் விபத்தில் இளவரசர் பிலிப் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என அந்த பெண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த பெண் இளவரசர் பிலிப் மீது வழக்கு தொடர்வாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. #PrincePhilip
பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (வயது 97) ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அதிர்ஷடவசமாக காயமின்றி இளவரசர் பிலிப் தப்பினார். கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டிங்கம் எஸ்டேட் அருகே இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

விபத்து நடைபெற்றதை பக்கிங்ஹாம் அரண்மனையும் உறுதி செய்துள்ளது. இளவரசருக்கு இந்த விபத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா தனது மனைவி மிட்செல் ஒபாமாவுடன் சுற்றுப்பயணம் வருகை தந்தார். அப்போது இளவரசர் பிலிப், இருவரையும் தனது காரில் அவரே ஓட்டிச்சென்று மதிய விருந்துக்கு அழைத்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. #PrincePhilip