புவனகிரி அருகே கார் மோதி முதியவர் சாவு

அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
புவனகிரி அருகே கார் மோதி முதியவர் சாவு
Published on

கடலூர்:

புவனகிரி அடுத்த கிளாவடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த கார் செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்த செல்வராஜை. அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிளாவடி நத்தம் மெயின் ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் எரியாத தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்து கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com