search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலை விபத்தில் உயிரிழந்த தாய்; ஈமச்சடங்கிற்கு சென்ற மகனும் கார் விபத்தில் பலியான சோகம்
    X

    சாலை விபத்தில் உயிரிழந்த தாய்; ஈமச்சடங்கிற்கு சென்ற மகனும் கார் விபத்தில் பலியான சோகம்

    • தாயும் மகனும் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது
    • இறுதி சடங்கிற்கு நண்பரின் காரில் புறப்பட்டார் மற்றொரு மகன்

    மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராணி தேவி (55).

    இவரது கணவர் பல வருடங்களுக்கு முன் காலமானார். இவருக்கு 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.

    உத்தரபிரதேச எல்லைக்கு அருகே ரேவா மாவட்டத்தில், ஜாத்ரி கிராமத்தில் தன் மூத்த மற்றும் கடைசி மகனுடன் வசித்து வந்தார்.

    ராணி தேவி தன் தாய் வீட்டிற்கு செல்வதற்காக தனது ஒரு மகன் ஸன்னியுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அவர்கள் வீட்டிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் தபோரா எனும் இடத்தில் அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது ஒரு மோட்டார் சைக்கிள் வந்து மோதியது.

    இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவர்களை 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேவா பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனையடுத்து அவரை அங்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராணி தேவி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.

    இந்த செய்தியை கேள்விப்பட்ட இந்தூரில் வசித்து வந்த ராணி தேவியின் மற்றொரு மகன் சூரஜ் மிகவும் அதிர்ச்சியடைந்தார். துக்கம் தாங்காமல் தாயின் முகத்தை இறுதி முறையாக காண, தனது நண்பர் அபிஷேக் சிங்குடன் காரில் ஒரு ஓட்டுனருடன் தாயின் இறுதி சடங்கிற்காக சென்றனர்.

    ஆனால் சூரஜ்ஜின் சொந்த ஊருக்கு 100 கிலோ மீட்டர் முன்பாக சாட்னா மாவட்டத்தில் ராம்பூர் பகேலன் பகுதியில் அவர்களின் கார் விபத்திற்குள்ளானது. மூவரும் அங்கிருந்து ரேவா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சூரஜ் உயிரிழந்தார்.

    பின்னர், தாய், மகன் இருவரின் உடல்களும் ஜாத்ரி கிராமத்தில் எரியூட்டப்பட்டது.

    12-மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து தாயும் மகனும் உயிரிழந்து ஒரே நாளில் எரியூட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×