புவனகிரி அருகே கூரை வீட்டுக்குள் கார் புகுந்தது: பெண்கள் உள்பட 3 பேர் காயம்

மணிகண்டன் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார். எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது.
கார் கூரை வீட்டிற்குள் புகுந்து நிற்கும் காட்சி.
கார் கூரை வீட்டிற்குள் புகுந்து நிற்கும் காட்சி.
Published on

கடலூர்:

புவனகிரி அருகே கூரை வீட்டிற்குள் கார் புகுந்து 3 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருேக உள்ள ஆதிவராக நத்தத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சாலை ஓரம் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று இரவு வடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மணி கண்டனின் கூரை வீட்டிற்குள் புகுந்தது. 

இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மணிகண்டன் மனைவி அமாவாசை (80), தில்காலைக்கரசி (31), பிரவினா (18) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டனர். இதனை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். ,இதனை பார்த்ததும் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை சிதம்பரம் ராஜா முத்தையாமருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com