கார் மோதி முதியவர் பலி - நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி., காட்சிகள்

தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது.காரை ஓட்டிவந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
 சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவரை படத்தில் காணலாம்
 சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட முதியவரை படத்தில் காணலாம்
Published on

தாராபுரம் :

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கருப்பராயன்வலசு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 60). இவர் செலாம்பாளையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே தாராபுரம் உடுமலை சாலையை கடக்க முயன்ற போது உடுமலைபேட்டையில் இருந்து தாராபுரம் நோக்கி வந்த சொகுசு கார் மோதியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டிவந்த உடுமலைப்பேட்டை போடி பட்டியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன் (38) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com