என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிழா"

    • திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி ராதா, சித்திரை திருவிழாயை முன்னிட்டு வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை காண தனது இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தார். பின்னர் அங்கு சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

    அப்போது வழியில் ரவி தியேட்டர் எதிரே அமைக்கப்பட்ட அன்னதான கூடத்தில் அன்னதானம் வாங்கினார். அதே சமயம் ராதா கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் நகையை 'மர்ம' நபர்கள் திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் நைசாக பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். என்ன நடந்தது என்று நினைவு திரும்புவதற்குள் அவர்கள் மின்னலாய் மறைந்தனர்.

    முன்னதாக சித்திரை திருவிழாவை முன்னிட்டு பரமக்குடி நகர் பகுதி மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் திருவிழா கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடும் கும்பல் பக்தர்களோடு பக்தர்களாக கூட்டத்தில் கலந்து நைசாக நகைகளை திருடி சென்று விடுகிறார்கள்.

    அதேபோல் தான் நகையை பறிகொடுத்த ராதா கழுத்து நிறைய நகைகள் அணிந்திருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்துள்ளனர். அன்னதானம் வாங்கும் ஆர்வத்தில் ராதா இருந்தபோது பின்னால் இருந்து நகைகளை பறித்து சென்றுவிட்டனர். நேற்று மாலை முதல் விடிய, விடிய போலீஸ் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி சென்றதால் நகை திருடர்களால் கைவரிசை காட்ட முடியவில்லை. இதனால் இன்று அதிகாலை நேரத்தை பயன்படுத்தி திருடிச் சென்று விட்டனர்.

    இதுகுறித்து ராதா கூறுகையில், நான் அதிகாலை 5 மணியளவில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்த போது ரவி தியேட்டர் எதிரே அன்னதானம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது கழுத்தில் அணிந்திருந்த 31 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் எப்படி திருடி சென்றார்கள் என்பது எனக்கு புரியாத புதிராக இருக்கிறது. எனவே எனது தங்கச் சங்கிலியை போலீசார் மீட்டு தர வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார். திருடு போன நகையின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்து நகை பறிப்பு திருடர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சித்திரை திருவிழா காண வந்த பக்தர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    • சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
    • வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 62). இவர் தற்போது வாழை, தென்னை மரங்களை சாகுபடி செய்து இருந்தார். இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த சூறாவளி காற்றால் சுமார் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    மேலும் மிளகாய்பட்டி, ஆண்டிபட்டி, முசுவனூத்து உள்ளிட்ட கிராமங்களிலும் மின்வினியோகம் தடைபட்டு இருளில் மூழ்கி கிடந்தன. இந்நிலையில் மின்சார வாரியத்துறையின் நடவடிக்கையால் மீண்டும் மின்வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மீண்டும் திடீரென இப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் ராஜேந்திரன் என்பவரின் தோட்டத்தில் இருந்த சுமார் 2000 வாழை மரங்களின் நடுப்பகுதி முறிந்து தரையில் சாய்ந்தது. இதைப் பார்த்த விவசாயி ராஜேந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் மிகுந்த கவலையடைந்தனர்.

    மேலும் இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் அக்னி நட்சத்திர சீசனில் மழை பெய்வது ஆறுதலாக இருந்த போதிலும், சூறாவளி காற்றுடன் பெய்த மழை பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டத்தில் வாழை விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலக்கோட்டை, பழனி, சத்திரப்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    மேலும் தென்னை மரங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. எனவே வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களில் ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
    • குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள கரம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    திரவுபதி அம்மன் கோயில தீமிதி திருவிழாவை முன்னிட்டுகோவத்தகுடி அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் இருந்து கிராமவாசிகள், சக்தி கரகம் எடுத்து மேள தாளத்துடன் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீகுண்டத்தில் கிராமவாசிகள் இறங்கி தீமித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ஏற்பாடுகளை கரம்பை கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    ×