search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School riots"

    • கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தனர்.
    • சொத்துகளை சேதப்படுத்தியதாக மேலும் 3 பேர் கைது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீசார் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்தை தூண்டி யவர்கள் மற்றும் கலவ ரத்தில் கலந்து கொண்டு பள்ளிசொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவி னர் கைது செய்து வருகின்றனர். 

    அந்த வகையில் இது தொடர்பாக இதுவரை 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலை யில் கலவரத்தின் போது பள்ளி சொத்துகளை சேதப்ப டுத்தியதாக கள்ளக் குறிச்சி அருகே லட்சியம் கிரா மத்தை சேர்ந்த மணி கண்டன் (வயது 32), இரு சக்கர வாகனங்களை சேதப்டுத்தியதாக சங்கரா புரம் தாலுகா மூரார்பா ளையம் கிராமத்தை சேர்ந்த மதுபாலன் (22), போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சின்ன சேலம் தாலுகா ராயர்பா ளை யத்தை சேர்ந்த சீராளன் (28) ஆகிய 3 பேரை வீடியோ ஆதா ரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

    • கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • போராட்டக்காரர்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இருந்து போனார். இதையடுத்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

    இந்நிலையில் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினியை சேர்ந்த பச்சமுத்து மகன் மணிவேல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வீடியோ காட்சிகளின் அடிப்படையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏர்வாய் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் வல்லரசு (வயது 20). இவர் வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து அதில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து பள்ளியில் கலவரம் செய்ய தூண்டும் வகையில் தகவல்கள் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.எனவே போலீசார் இவரை கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் ஐவதக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த ஞானபிரகாசம் (41). இவர் கலவரத்தினை தூண்டு விதமாக செயல்பட்டார். எனவே சிறப்பு புலனாய்வு குழு போலீசார்வீடியோ காட்சி களின் அடிப்ப டையிலும், வலைதளங்களை ஆய்வு செய்தும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 2பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • பள்ளி பேருந்துகள், கட்டிடங்கள் முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட, அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது.
    • போட்டோ, வீடியோக்களை ஆதாரங்களை கொண்டு கைது செய்து வரும் சிறப்பு புலனாய் குழு போலீசார் மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து என அறிவித்துள்ளனர்

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில கடந்த மாதம் 13-ந் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீமதி மாணவிக்கு நீதி கேட்டு மாணவியின் பெற்றோர் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று. அது 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி பேருந்துகள், கட்டிடங்கள் முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட, அனைத்து பொருட்களும் சேதம் அடைத்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிறப்பு புலனாய் குழு அமைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இதில் பள்ளி கட்டிடங்களையும், சான்றிதழ்களையும், பேருந்துகளையும் சேதப்படுத்தியவர்களை நேற்று முன் தினம் வரை 327 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்துக்கு தீ வைத்ததாகவும் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் பஸ் மீது கல் இருந்ததாகவும் போட்டோ, வீடியோ ஆதாரங்களை வைத்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த சந்தோஷ் (வயது 22), சங்கராபுரத்தை சேர்ந்த நவீன்குமார், (வயது 21) சின்னசேலத்தை சேர்ந்த மணிவர்மா (வயது 21), உளுந்தூர்பேட்டை சேர்ந்த முருகன் வயது 20, மேலும் நான்கு பேரை நேற்று கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை 331 ஆக உயர்ந்தது. போட்டோ, வீடியோக்களை ஆதாரங்களை கொண்டு கைது செய்து வரும் சிறப்பு புலனாய் குழு போலீசார் மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து என அறிவித்துள்ளனர்.

    ×