search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "workers strike"

    • பாசிக் ஊழியர்கள் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் எதிரில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • , ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ண மூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாசிக் தொழிலாளர்க ளுக்கு வழங்கவேண்டிய 116 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ஊழியர்க ளுக்கு மாதம்தோறும் தொடர்ந்து சம்பளத்தை வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊழியக்குழு பரிந்துரைபடி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் எனக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் எதிரில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று 100-வது நாளாக பாசிக் ஊழியர்களின் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி.மாநில பொருளாளர் அந்தோணி, துணைத்தலை வர்கள் சந்திரசேகர், சேகர், மாநில செயலாளர் துரை செல்வம், தயாளன், மூர்த்தி, பாஸ்கர பாண்டியன், மாநில நிர்வாக குழு உறுப்பி னர்கள் பூபதி, ஜீவானந்தம், சண்முகம், மாரிமுத்து, பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி,கோவிந்தராசு, மணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குண சீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ண மூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • நிலுவைத்தொகை வழங்க வலியுறுத்தல்
    • 2 வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே உள்ள சோலூர் ஊராட்சியில் தனியார் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தோல் தொழிற்சாலை மூடப்பட்டது.

    அப்போது பாதி பேருக்கு சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மென்ட் வழங்கப்பட்டது. மேலும் பலருக்கு வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இது குறித்து பலமுறை தோல் தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பலமுறை நிலுவைத் தொகை வழங்க கோரியும், இதுவரை வழங்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பூட்டி கிடந்த தோல் தொழிற்சாலையை கதவுகள் உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    சம்பளம் நிலுவைத் தொகை மற்றும் செட்டில்மெண்ட் வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது
    • 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் இன்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், வேலூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கினார் .

    மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மாவட்டத் துணைத் தலைவர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழிற்சாலை இடம் மாற்றத்தை கண்டித்து நடந்தது
    • போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இதில் 600-க்கும் மேற்ற பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் தொழிற்சாலை இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடத்தியும் தொழிற் சாலை நிர்வாகம் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில், உமராபாத் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    இன்று வேலை நிறுத்தம் செய்ய போவதாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பஸ்கள் இயக்கப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக கருப்பணன், நடத்துனராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழித்தடம் மாற்றி அரசு பஸ்சை இயக்கியதாக புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து கிளை மேலாளர் அவர்கள் 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகிகள் பஸ்களை இயக்க மறுத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பஸ்கள் இயக்கப்படாமல் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் சுமார் 2 மணிநேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டது.

    • ரூ.380 தினக் கூலியாக வழங்க வலியுறுத்தல்
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, பல ஆண்டுகளாக பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக் கூலியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி போனஸ் பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
    • தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சுமார் 80,000 மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

    மேலும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பஸ்நிலையம், கிழங்கு மண்டி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரி, வணிக நிறுவனங்கள், டீக்கடைகள், உணவகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 20 டன்னுக்கு அதிகமாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இந்த குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 77 தற்காலிக, 140 நிரந்தர பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

    இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.300 ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606 ஊதியமாக வழங்க தொகை நிர்ணயம் செய்திருந்ததை துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்க நிர்வாகிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்திடம் தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த மாதம் முதல் தூய்மை பணியாளருக்கு ரூ. 465 வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றி வந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ரத்து செய்தது.

    இதையடுத்து தூய்மை பணியாளர்கள் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் தாங்கள் 10 மாதங்களாக பணியாற்றியதற்கு தீபாவளி போனஸ் நகராட்சி பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

    ஆனால் நகராட்சி ஆணையாளர் அளித்த பதில் தூய்மை பணியாளர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தற்காலிக பணியாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில்: தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்து அவர்களுக்கு ஊதியம் வழங்கினால் எங்களின் பணி சுமை குறையும். இந்த ஆண்டு எங்களுக்கு வழங்க வேண்டிய தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட சென்றால் எங்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்காமல் எங்களை அலைக்கழித்து வருகிறார் என்றனர்.

    • முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு
    • போலீசார் பேச்சுவார்த்தை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் ஓரந்தவாடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் மற்றும் வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பாதிக்கப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திருவண்ணாமலை-காஞ்சி சாலை ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் மற்றும் வேலை வழங்க உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - தக்காளி விலை உயர்ந்தது
    • தொழிலாளர்கள் ஒரு பெட்டி தக்காளி இறக்குவதற்கு ரூ9. 75 பைசா வியாபாரிகளிடம் கூலியாக பெற்று வந்தனர்.

    திருச்சி,

    திருச்சி காந்தி மார்க்கெட் தக்காளி கமிஷன் மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொழிலாளர்கள் ஒரு பெட்டி தக்காளி இறக்குவதற்கு ரூ9. 75 பைசா வியாபாரிகளிடம் கூலியாக பெற்று வந்தனர். இந்த கூலி உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தத்தில் களமிறங்கினர்.

    பின்னர் தொழிற்ச ங்கத்தினருக்கும் தக்காளி கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு பெட்டிக்கு ரூ. 11 வழங்குவது என்றும், இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதனை ஒரு தரப்பு தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஆனால் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்த காலத்தை இரண்டே முக்கால் ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வழக்கமாக திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் 20 லோடு தக்காளி கொண்டு வரப்படும். வேலைநிறுத்தம் காரணமாக இன்றைய தினம் 2 லோடு தக்காளி மட்டுமே மார்க்கெட்டுக்கு வந்தது. அதனை போராட்டத்தை கைவிட்ட ஒரு தரப்பு தொழிலாளர்கள் இறக்கியதாக கூறப்பட்டது.

    கொள்முதல் குறைக்கப்பட்டதால் திருச்சி சில்லறை மார்க்கெட்டில் தக்காளி விலை இன்றைய தினம் உயர்ந்து விட்டது. நேற்று முன்தினம் ரூ. 30 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.40 ஆக விலை உயர்ந்துள்ளது.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக காந்தி மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் கலீலுல் ரகுமான் கூறும்போது,

    இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போரா ட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கத்தினர் இங்கிலீஷ் காய்கறி வியாபாரிகளிடம் 3 ஆண்டுகளுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் தக்காளி கமிஷன் வண்டி வியாபாரிகளிடம் ஒப்பு க்கொள்ள மறுக்கி றார்கள்.

    இந்தப் போரா ட்டத்தினால் தக்காளி விலை உயர்ந்து பொதுமக்களுக்கு தேவையில்லாத சுமை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே ஏற்கனவே நடத்தப்பட்ட சமூக பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    • திருமாந்துறை சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் முறையில் நடத்தி வருகிறது.
    • இந்த சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

    பெரம்பலூர் :

    திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா திருமாந்துறையில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியை தனியார் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் முறையில் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணியாற்றிய 28 பேரை அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணயாளர்களும் நேற்று காலை திருமாந்துறை சுங்கச்சாவடியின் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கட்டணம் செலுத்தாமல் சென்ற வாகனங்கள் காத்திருப்பு போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.

    அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுங்கச்சாவடியில் 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை மீண்டும் பணியமர்த்த தனியார் நிறுவனத்தை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் விஜயகுமார் கூறுகையில், திருமாந்துறை சுங்கச்சாவடியை போல், கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 32 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதில் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு என்று அறிக்கை வெளியிட்டும், அவர்களை பணியில் அமர்த்த ஒப்பந்த நிறுவனம் மெத்தன போக்கை கையாண்டு வருகிறது. பணியாளர்கள் அனைவரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும், என்றார். பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாததால் வாகனங்கள் இலவசமாக சென்று வருகின்றன.

    • தபால்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    அரியலூர்:

    நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்தும், அஞ்சலக துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரியும், ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் துணை அஞ்சலக ஊழியர்கள் நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் அலுவலகம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் தபால் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்."

    • பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு
    • நெற்றியில் நாமம் போட்டு நூதனம்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை மாட்டு வண்டிகள் மற்றும் நெற்றியில் நாமம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மணல் குவாரிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்க கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மணல் குவாரிகளில் இருந்து தினசரி 800 லாரிகளில் 3 ஆயிரம் யூனிட்டுக்கு மேலாக மணல் அள்ளப்படுகிறது பசுமை தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு உத்தரவுகளை இதில் மதிக்கவில்லை.

    மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க அனுமதி அட்டை வழங்க 3 மாதங்களாக சென்னை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை அனுமதி அட்டை வழங்கவில்லை. மாட்டு வண்டியில் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    ×