குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்

வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்.
Published on

வேலூர்:

வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேலை செய்யும் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் இன்று 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், வேலூர் ஒன்றிய செயலாளர் குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கினார் .

மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மாவட்டத் துணைத் தலைவர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடிநீர் பம்ப் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com