ஷூ கம்பெனி தொழிலாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தொழிற்சாலை இடம் மாற்றத்தை கண்டித்து நடந்தது போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்
ஷூ கம்பெனி தொழிலாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த பெரியவரிகம் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இதில் 600-க்கும் மேற்ற பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சம்பளம், நிலுவைத் தொகை மற்றும் தொழிற்சாலை இடம் மாற்றம் செய்யப்படுவதை கண்டித்து, 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் போராட்டம் நடத்தியும் தொழிற் சாலை நிர்வாகம் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில், உமராபாத் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் உடன் பாடு ஏற்படாததால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இன்று வேலை நிறுத்தம் செய்ய போவதாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com