பெரியகுளத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஊழியர்கள் போராட்டம்

தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பஸ்கள் இயக்கப்பட்டது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக கருப்பணன், நடத்துனராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழித்தடம் மாற்றி அரசு பஸ்சை இயக்கியதாக புகார் எழுந்தது.

இதனைதொடர்ந்து கிளை மேலாளர் அவர்கள் 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகிகள் பஸ்களை இயக்க மறுத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் பஸ்கள் இயக்கப்படாமல் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் சுமார் 2 மணிநேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com