search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - தக்காளி விலை உயர்ந்தது
    X

    திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - தக்காளி விலை உயர்ந்தது

    • திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - தக்காளி விலை உயர்ந்தது
    • தொழிலாளர்கள் ஒரு பெட்டி தக்காளி இறக்குவதற்கு ரூ9. 75 பைசா வியாபாரிகளிடம் கூலியாக பெற்று வந்தனர்.

    திருச்சி,

    திருச்சி காந்தி மார்க்கெட் தக்காளி கமிஷன் மண்டி சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொழிலாளர்கள் ஒரு பெட்டி தக்காளி இறக்குவதற்கு ரூ9. 75 பைசா வியாபாரிகளிடம் கூலியாக பெற்று வந்தனர். இந்த கூலி உயர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தத்தில் களமிறங்கினர்.

    பின்னர் தொழிற்ச ங்கத்தினருக்கும் தக்காளி கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு பெட்டிக்கு ரூ. 11 வழங்குவது என்றும், இந்த ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    இதனை ஒரு தரப்பு தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஆனால் சிஐடியு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கூலி உயர்வு ஒப்பந்த காலத்தை இரண்டே முக்கால் ஆண்டுகளாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வழக்கமாக திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் 20 லோடு தக்காளி கொண்டு வரப்படும். வேலைநிறுத்தம் காரணமாக இன்றைய தினம் 2 லோடு தக்காளி மட்டுமே மார்க்கெட்டுக்கு வந்தது. அதனை போராட்டத்தை கைவிட்ட ஒரு தரப்பு தொழிலாளர்கள் இறக்கியதாக கூறப்பட்டது.

    கொள்முதல் குறைக்கப்பட்டதால் திருச்சி சில்லறை மார்க்கெட்டில் தக்காளி விலை இன்றைய தினம் உயர்ந்து விட்டது. நேற்று முன்தினம் ரூ. 30 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று ரூ.40 ஆக விலை உயர்ந்துள்ளது.

    இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக காந்தி மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் கலீலுல் ரகுமான் கூறும்போது,

    இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போரா ட்டத்தை முன்னெடுத்துள்ள தொழிற்சங்கத்தினர் இங்கிலீஷ் காய்கறி வியாபாரிகளிடம் 3 ஆண்டுகளுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆனால் தக்காளி கமிஷன் வண்டி வியாபாரிகளிடம் ஒப்பு க்கொள்ள மறுக்கி றார்கள்.

    இந்தப் போரா ட்டத்தினால் தக்காளி விலை உயர்ந்து பொதுமக்களுக்கு தேவையில்லாத சுமை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே ஏற்கனவே நடத்தப்பட்ட சமூக பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    Next Story
    ×