என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியின் கைப்பையை திருடியவர் கைது
- கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில்
- ரூ.50 ஆயிரம் பணத்துடன் மூதாட்டியின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை :
கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மயிலாத்தாள் (வயது 69). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த மர்மநபர் யாரோ மயிலாத்தாளின் கைப்பையைதிருடி தப்பிச் சென்றனர். அந்த கைப்பையில் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம், 4 சேலை, செல்போன் ஆகியவை இருந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பணத்துடன் மூதாட்டியின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Next Story






