என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது - துரை வைகோ பேச்சு
- கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
- யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் அருகே ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும் போது,
பத்திரிகையாளர்களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்ச்சை க்குரிய வகையில் பேசியது கண்டனத்துக்கு ரியது, அரசியல் கட்சித் தலைவருக்கு இது அழகல்ல. பத்திரிகையாளர்களை மதிக்கும் பண்பை முதலில் அவர் கற்றுக் கொள்ள வேண்டும் .
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தி ல் தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக ளை கண்டறிந்தது, அதே வேளையில் இந்த சம்பவத்தில் தேசிய மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ப தால் தான் இந்த வழக்கை என்ஐ ஏ விற்கு மாற்ற தமிழக முதல்வர் பரிந்துரை செய்துள்ளார்,
இந்த பிரச்சனையில் முறையான விசார ணை நடந்து கொண்டிருக்கும்போது தேவையில்லாத கருத்துக்க ளை அரசியல் தலைவர்கள் சொல்ல வேண்டியதில்லை,
திருமாவளவன் வைகோ உள்ளிட்டவர்கள் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என ஹெச். ராஜா சொல்லி இருப்பது நகைச்சுவையாக உள்ளது, ஹெச்.ராஜா கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை,
கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க கூடாது, இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவிற்கு வயதாகி விட்டாலும் உணர்ச்சி வேகம் இன்னும் குறையவில்லை,அவர் இன்று வரை களத்தில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார், அவரின் வெற்றிடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது இவ்வாறு அவர் கூறினார்.






