இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது

வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார்.தர்மராஜை போலீசார் கைது செய்த பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது
Published on

கோவை :

கோவை புலியகுளத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு இளம்பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் படுத்து தூங்கினார். நள்ளிரவு 1 மணியளவில் அதே பகுதியில் வசிக்கும் தர்மராஜ் (வயது 22) என்ற வாலிபர் வீட்டின் ஒட்டை பிரித்து உள்ளே குதித்தார். பின்னர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். இதனையடுத்து அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம்பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் தர்மராஜ் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து இளம்பெண் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தர்மராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com