என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    2-வது திருமணத்தை தட்டிக்கேட்டபெண்ணுக்கு கொலை மிரட்டல்
    X

    கோப்பு படம்.

    2-வது திருமணத்தை தட்டிக்கேட்டபெண்ணுக்கு கொலை மிரட்டல்

    • வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
    • ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வீராம்பட்டி னம் பகுதியை சேர்ந்தவர் கலைஞர். மீனவர்.

    இவரது மனைவி ஜமுனா (வயது 32). திருமணத்தின் போது பெண் வீட்டினர் 25 பவுன் நகை, ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். கலைஞர், அடிக்கடி குடித்துவிட்டு, பணத்தை சூதாட்டத்தில் செலவழித்து வந்ததாக தெரிகிறது.

    இதனை தட்டிக் கேட்ட ஜமுனாவை தாக்கி வந்துள்ளார். மேலும், பணம், நகை வாங்கி வருமாறு அடித்து வந்துள்ளார். இதற்கிடையே, கலைஞர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி, 2-வது திருமணம் செய்ததாக தெரிகிறது. இதனை ஜமுனா தட்டிக் கேட்டபோது அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலைஞர், வழக்கை வாபஸ் பெறா விட்டால், வீட்டினுள் வைத்து பூட்டி பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதற்கு கணவர் குடும்பத்தினர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜமுனா, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில், கணவர் கலைஞர், மாமியார் மரக தம், நாத்தனார் சித்ரா ஆகிய 3 பேர் மீதும் வரதட் சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×