என் மலர்
நீங்கள் தேடியது "Naam Tamizhar Katchi"
- எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
- பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.
நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துள்ளார்.
இதுதொடர்பாக கமல்ஹாசன் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான். பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.
பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.
தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.
நீடு வாழ்க இளவல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மு.க.முத்து உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் கூறிய பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "எனது அண்ணன் திரு. மு.க.முத்து அவர்களது மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன சகோதரர் திரு. செல்வப்பெருந்தகை, தோழர் திரு. கே.பாலகிருஷ்ணன், சகோதரர் எழுச்சித் தமிழர் திரு. தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, திரு. தமிமுன் அன்சாரி, திரு. வசீகரன், சகோதரர் துரை வைகோ, சகோதரி தமிழிசை சௌந்தரராஜன், திரு. கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரு. சத்யராஜ், திரு. விக்ரம் உள்ளிட்ட கலையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் - ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கலைப் பகிர்ந்துகொண்ட சகோதரர் திரு. ராகுல் காந்தி, திரு. ஓ.பன்னீர்செல்வம், திரு. ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த திரு. சீமான் உள்ளிட்ட அனைவர்க்கும் நன்றி!" என்று பதிவிட்டுள்ளார்.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
- நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க முத்து மறைவுக்கு சீமான் ஆறுதல் தெரிவித்தார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்த அவர்,"
அரசியலுக்கு அப்பால் இதுபோன்ற தருணங்களில் நடந்து கொள்வதுதான் நாகரிகம்.
கட்சி முரண்பாடுகளை கடந்து இத்தகைய தருணங்களில் தலைவர்கள் நடந்து கொள்வது இயல்புதான்.
நான் பசியால் மயக்கமடைந்தபோது எனது உடல்நலம் குறித்து விசாரித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எப்படி இருந்தாலும் ஒரு இழப்பு என்பது பெருந்துயரம்" என்றார்.
- நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
- மக்களவை தேர்தலில் மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டி போட்டது. அதன்பிறகு வந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
பிறகு கடந்த மக்களவை தேர்தலில் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. எனினும் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி, மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றது.
இந்த நிலையில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
அதன்படி, கலப்பையுடன் விவசாயி இருப்பது போன்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள சீமான், "மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
- இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம்.
- விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என கொலை மிரட்டல்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீமானுக்கு விடுத்த கொலை மிரட்டல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், தேனியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு வெளியிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அந்த இன்ஸ்டா ஸ்டோரி பதிவில், சீமானின் தலை விரைவில் துண்டிக்கப்படும், விரைவில் நாதக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டி நிலவும் என பதிவிட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
- மாநாடு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
- மே 18 இன எழுச்சி 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் மாநாடு
நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது இன எழுச்சி மாநாடு வருகிற நாளை மறுநாள் (18-ந் தேதி) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.
மே 18 இன எழுச்சி முதல் மாநாடு மதுரையில் நடைபெற்றது. 12-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. 13-வது மாநாடு தற்போது தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெறுகிறது.
சீமான் ஆலோசனை
இதில் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள கட்சியினர், தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மாநாட்டு ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சிவக்குமார், இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் இசை மதிவானன், மண்டல ஒருங்கி ணைப்பாளர்கள் தூத்துக்குடி ராஜசேகர், நெல்லை சத்யா, கன்னியாகுமரி பெல்வின்ஜோ, தென்காசி அருண்சங்கர் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
மே 18 இன எழுச்சி மாநாடு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவும், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காகவும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை தூத்துக்குடி வருகிறார். அவருக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகம் களமாடி வருகிறது.
- யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரைக் கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார்.
விஜய் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்த சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சம்பத்குமார் பரபரப்பான அறிக்கை ஒன்றை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சென்னையில் நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன் வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வார்கள்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுகளுக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்நிலை நிர்வாகிகளுக்கு பல பணிகள் உள்ள நிலையில் சீமானைப் போன்று பேசுபவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.
அரசியல் எதிரி யார் என்பதை முடிவு செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகம் களமாடி வருகிறது. யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரைக் கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார்.
சீமான் தனது கருத்தை தனது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டு போக விரும்பவில்லை. அவரவர் கருத்து அவரவர் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்து விட்டுப் பணியைக் கவனிப்பதே அனைவருக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






