என் மலர்
நீங்கள் தேடியது "Sunbath"
- அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
- சூரிய குளியல் மீது எனக்கு ஆர்வம் ஏதுமில்லை என்றார் டிரம்ப்.
வாஷிங்டன்:
அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகாமெனியின் நெருங்கிய ஆலோசகரான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், புளோரிடாவில் உள்ள டிரம்பின் சொகுசு பங்களாவான மார்-ஏ-லாகோவில் அவர் சூரிய குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய டிரோன் மூலம் தாக்கப்படலாம். இது மிகவும் எளிமையானது என தெரிவித்தார்.
ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிரம்ப் பதிலளிக்கையில், உண்மையில் அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாம். நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன். ஆனால் எனக்கு அதன்மீது ஆர்வம் ஏதுமில்லை என கிண்டலாக தெரிவித்தார்.
- கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
- கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
வீரேநகர்:
நெதர்லாந்த் வீரேநகரில் புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. காதலர்களின் சொர்க்கபுரியாக திகழும் இந்த கடற்கரைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருவார்கள். விடுமுறை நாட்களில் ஏராளமான காதல் ஜோடிகள் இங்கு திரளுவார்கள்.
காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து கொண்டு சில்மிஷத்தில் ஈடுபடுவது உண்டு. சில காதலர்கள் மெய்மறந்து அத்துமீறுவதும் உண்டு. பக்கத்தில் யார்? இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர்கள் நிர்வாணமாக உல்லாசத்திலும் ஈடுபடுவார்கள், கடற்கரைக்கு அருகில் இருக்கும் சிறு குன்றுகளை கூட காதலர்கள் விடுவது இல்லை. அங்கும் அவர்கள் ஜாலியாக இருப்பார்கள்.
இதனால் அந்த கடற்கரைக்கு பொழுது போக்குவதற்காக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் காதலர்களின் செயல்களை பார்த்து முகம் சுழித்தனர்.
கடற்கரையை படுக்கை அறைகாக மாற்றும் இளசுகளின் இந்த அத்துமீறல் குறித்து வீரேநகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் வந்தது. இதையடுத்து வீரேநகர் கடற்கரையில் காதல் ஜோடியினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. கடற்கரையிலும் இது தொடர்பாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கபட்டு உள்ளது.
இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன்பாத் எடுக்க வரும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை என்றும் உடல் ஆரோக்கியத்துக்காக சன்பாத் எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.






