என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய குளியல்"

    • அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
    • சூரிய குளியல் மீது எனக்கு ஆர்வம் ஏதுமில்லை என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலிகாமெனியின் நெருங்கிய ஆலோசகரான ஜவாத் லாரிஜானி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், புளோரிடாவில் உள்ள டிரம்பின் சொகுசு பங்களாவான மார்-ஏ-லாகோவில் அவர் சூரிய குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு சிறிய டிரோன் மூலம் தாக்கப்படலாம். இது மிகவும் எளிமையானது என தெரிவித்தார்.

    ஈரான் மிரட்டல் குறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டிரம்ப் பதிலளிக்கையில், உண்மையில் அது ஓர் அச்சுறுத்தலாக இருக்கலாம். நான் கடைசியாக 7 வயதில் சூரிய குளியல் செய்தேன். ஆனால் எனக்கு அதன்மீது ஆர்வம் ஏதுமில்லை என கிண்டலாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
    • பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து அனுமதி.

    ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

    ஜெர்மனி நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் செனட்டின் புகார் அலுவலகத்தில் ஆண், பெண் என்று பாகுபாடு பார்க்க கூடாது. விருப்பப்பட்டால் ஆண்கள் போன்று பெண்களும் மேலாடையின்றி குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இதையடுத்து, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சட்ட ரீதியாக அனுமதி கிடைத்துள்ளது. அவருக்கு மட்டுமல்ல பெர்லின் நகரில் பெண்கள் மேலாடையின்றி பொது நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெர்லின் அதிகாரிகள் பெண்கள் பாகுபாட்டிற்கு ஆளாகியிருப்பதை உணர்ந்து, பெர்லினின் குளங்களுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் இனி மேலாடையின்றி குளிக்க உரிமை பெற்றுள்ளனர் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த அனுமதி எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்த தகவல் இல்லை.

    இருப்பினும், இந்த அனுமதி வியப்பை தந்தாலும், இந்த முடிவிற்கு பலர் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

    ×