என் மலர்tooltip icon

    இந்தியா

    நகராட்சித் தேர்தலில் கூட்டணி...  ஒன்றாக குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்
    X

    நகராட்சித் தேர்தலில் கூட்டணி... ஒன்றாக குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்ட தாக்கரே சகோதரர்கள்

    • ராஜ் தாக்கரே 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா கட்சியை தொடங்கினார்
    • உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக கைகோர்த்தனர்.

    சிவசேனா கட்சியின் நிறுவனா் பால் தாக்கரேவின் இளைய சகோதரா் மகனான ராஜ் தாக்கரே கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து 2006-ஆம் ஆண்டு விலகி, மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற கட்சியை தொடங்கி எதிர் துருவத்தில் செயல்பட்டு வந்தார்.

    இந்நிலையில் உத்தவ் மற்றும் ராஜும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மராத்தி மொழிக்காக ஒன்றாக கைகோர்த்தனர்.

    தேசிய கல்விக் கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.இந்த முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் கூட்டாக இந்தி எதிர்ப்பு பேரணி நடத்தியது.

    இந்நிலையில், வரவிருக்கும் நகராட்சித் தேர்தல்களுக்காக உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனா காட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    கூட்டணி முடிவை அறிவித்த பிறகு தாக்கரே சகோதரர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    உத்தவ்-ராஜ் கூட்டணி இந்தியா கூட்டணிக்கும் வலுவானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளும் மும்பை, தானே, கொங்கன் மற்றும் நாசிக் ஆகிய இடங்களில் பலமாக உள்ளன.

    Next Story
    ×