என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி செய்து பாருங்கள்!  - உத்தவ் தாக்கரே
    X

    தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி செய்து பாருங்கள்! - உத்தவ் தாக்கரே

    • பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.
    • மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்.

    மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையின்கீழ் , மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை 3-வது கட்டாய மொழியாக மாற்ற அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டது.

    இதற்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் 2 அரசாணைகளை மகாராஷ்டிரா அரசு திரும்ப பெற்றது.

    தங்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை கொண்டாடும் விதமாக நவநிர்மாண் சேனா மற்றும் உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியினர் இணைந்து மும்பையில் நேற்று வெற்றி பேரணி நடத்தினர்.

    மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினர்.

    இந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, "மொழி வெறியை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார். மகாராஷ்டிர மாநிலத்திற்கு வெளியே மராத்தி மொழியை திணிக்க மராட்டியர் யாராவது முயற்சி செய்துள்ளார்களா?

    தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் இந்தியை திணிக்க முயற்சி செய்து பாருங்கள்!. நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் எங்களை கட்டாயப்படுத்தினால், எங்கள் சக்தியைக் நாங்கள் காட்டுவோம்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×