என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெகா கூட்டணி"

    • திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

    தமிழக சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளது. மேலும், இந்த மெகா கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., ஐ.ஜே.கே., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த மாதம் 23ந்தேதி முதலாவது பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன், டாக்டர் அன்புமணி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து, அடுத்தகட்டமாக பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து, மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

    அப்போது, திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, மார்ச் 7-ந்தேதி வேலூரில் நடக்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    பிரதமர் மோடியின் மதுரை மற்றும் வேலுார் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மார்ச் 11-ந்தேதி திருச்சியில் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை ஒருங்கிணைக்க பா.ஜ.க. சார்பில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டத்திற்கான இடம் குறித்து தேர்வு நடைபெற்றது. திருச்சியை அடுத்த மாத்தூர் சுற்றுச் சாலை பகுதி, திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள காலி மனை மற்றும் ஜி கார்னர் ரெயில்வே மைதானம் ஆகிய 3 இடங்கள் தேர்வாகியுள்ளது.

    இடம் தேர்வு தொடர்பாக மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், மூன்று இடங்களையும் பார்வையிட்டு மேல் இடத்திற்கு தெரிவித்துள்ளோம். அனேகமாக ஜி கார்னர் மைதானம் தேர்வு செய்யப்படலாம்.

    நாளை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சி வருகிறார். அதன் பின்னர் இடம் தேர்வு தொடர்பான ஆலோசனைக்கு பின்னர் எந்த இடம் என்பது இறுதி செய்யப்படும் என்றனர்.

    பிரதமர் மோடி, 10 நாட்களில் 3 முறை தமிழகம் வருவது, பா.ஜ.க. மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால், தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • மகாராஷ்டிராவில் பா.ஜனதா, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் கூட்டணி
    • மெகா கூட்டணி என தங்களை அழைக்கும் இந்த கட்சிகள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களை பிடிக்க திட்டம்

    2024 பாராளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா (I.N.D.I.A.) என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளது. பா.ஜனதாவும் தங்களது கூட்டணியில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் இருப்பதாக கூறி வருகிறது.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்த மாநிலத்தில் மொத்தம் 48 எம்.பி. தொகுதிகள் உள்ளன. இந்த 48 தொகுதிகளில் 45 தொகுதிகளை பிடிப்பதுதான் எங்களின் மெகா கூட்டணியின் இலக்கு என மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவை பிரித்து அக்கட்சியை தனதாக்கிய ஷிண்டே, பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சியமைத்தார். இந்த கூட்டணியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை உண்டாக்கி, தனி கோஷ்டியாக திகழும் அஜித் பவார் இணைந்துள்ளார். அஜித் பவார் துணை முதல்வராக உள்ளார்.

    2019 தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன. பா.ஜனதா 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன குறிப்பிடத்தக்கது.

    • நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை.
    • விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிநகர் 4-வது தெருவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்திற்காக என்ன சாதனைகளை செய்தார்கள். பட்டியலிட அண்ணாமலை தயாரா?. பா.ஜ.க. தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளை இதுவரை ஒன்றை கூட தீர்க்கவில்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று வரை அடிக்கல் நாட்டப்பட்டதாகவே இருக்கிறது.

    நீட் தேர்வுக்கு மத்திய அரசு தற்போது வரை விலக்கு அளிக்கவில்லை. என்.எல்.சி. நிலம் எடுப்பு தொடர்பாக மத்திய அரசு பாராமுகம் காட்டியுள்ளது. இது போன்ற பிரச்சினைகளை அண்ணாமலை பேசினால் நன்றாக இருக்கும். விளம்பர அரசியலை அண்ணாமலை செய்து கொண்டிருக்கிறார். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அந்த விளம்பரம் தமிழகத்தில் எடுபடாது. அதே போல் காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்த காலத்தில் இந்திராகாந்தி, கருணாநிதி ஆகியோர் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.


    தேசிய கட்சிகளால் எந்த நலனும் இல்லை என்ற ஜெயலலிதாவின் முடிவையே எடப்பாடி பழனிசாமி தற்போது எடுத்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பற்றி எல்லாம் அண்ணாமலை விமர்சிக்கிறார். அதையெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் கேட்கவில்லை.

    அ.தி.மு.க. கூட்டணிக்கு நிறைய கட்சிகள் வர உள்ளன. நாங்கள் தற்போது தான் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே வேகம் எடுக்கும். அந்த நடைமுறையை தான் நாங்கள் பின்பற்றி வருகிறோம். விரைவில் நீங்கள் எதிர்பார்க்காத மெகா கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் உருவாகும். 39 தொகுதிகளிலும் வெற்றியை பெறுகிற கூட்டணியாக அ.தி.மு.க. இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×