என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல் சீற்றம்"

    • நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
    • மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம், வெள்ளபள்ளம் பகுதிகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித்து சென்று வருவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று கோடியக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் உள்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக 5000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    நூற்றுக்கணக்கான பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் கரையோரம் பாதுகாப்பாக வைத்துள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்கள் தங்கள் வலைகள் மற்றும் படகுகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. பலத்த காற்று குறைந்த உடன் மீண்டும் மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர். 

    • வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது.
    • கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று 4-வது நாளாக அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும், பயங்கர சீற்றத்துடனும் காணப்படுகிறது.

    இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல் பகுதிகளும் பயங்கர சீற்றமாக இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

    கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர். சூறாவளி காற்றுடன் கூடிய பயங்கர கடல் சீற்றம் காரணமாக இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. கடல் சீற்றம் மற்றும் கொந்தளிப்பு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று படகு போக்குவரத்து இயக்க வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு கடல் சார் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று முழுவதும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் இன்று அதிகாலையில் பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    இதேபோல சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் கொந்தளிப்பாகவும், சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    • நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன.
    • கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் கன்னியாகுமரியில் இன்று அதிகாலையில் இருந்தே பயங்கர சூறாவளி காற்று வீசிக்கொண்டிருந்தது. இருப்பினும் காலை 8 மணிக்கு வழக்கம்போல் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்ததால் கடல் பயங்கர கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை தொட்டுவிட்டு சென்றன. சில நேரங்களில் எழுந்து வந்து ராட்சத அலைகள் கரையில் உள்ள பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

    கரையை நோக்கி வந்த ராட்சத அலைகளை கண்டு கடற்கரையில் நின்று கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    அவ்வப்போது நிகழ்ந்த கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். சில நேரங்களில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்த சுற்றுலாப் பயணிகளை சுற்றுலா போலீசார் அங்கு இருந்து வெளியேற்றினர்.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.

    இந்த கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து தொடங்கிய ஒரு மணி நேரத்தில் விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 9 மணிக்கு "திடீர்"என்று ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் படகு துறையில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகிய வற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதேபோல சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    • சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
    • கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி பல இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை யொட்டி கன்னியாகுமரியில் இன்று காலையில் பயங்கர சூறாவளி காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. வங்கக்கடல், இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் பயங்கர சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் இருந்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    கடல் சீற்றத்தையொட்டி கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. கடல் சீற்றம் காரணமாக சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அவ்வப்போது கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றியபடி கண்காணித்து வந்தனர்.

    கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து காலை 11 மணி வரை தொடங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் படகுதுறையில் பல மணி நேரம் காத்திருந்து விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    மேலும் சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம் வாவத்துறை, கீழமணக்குடி, மணக்குடி உள்பட பல கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    • 'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
    • பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று காலை புயலாக வலுவடைந்து இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு 'டிட்வா' என பெயரிடப்பட்டுள்ளது.

    'டிட்வா' புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 460 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நவம்பர் 30-ந்தேதி அதிகாலையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதன் காரணமாக ராமேஸ்வரம் நோக்கி வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, சென்னை, மதுரையில் இருந்து வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.

    ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து சேரன் கோட்டை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது.

    பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் படகுகள் சேதம் அடைவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் இயல்பாக உள்ளது. இந்த நாட்களில் கடல் சுமார் 50அடியில் இருந்து 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரியும். ஆனால் கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் குறைவான பக்தர்களே புனித நீராடுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று 4-வது நாளாக சீற்றம் காணப்பட்டது.

    கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது. இதனால் பக்தர்கள் தயங்கியவாறு புனித நீராடி வருகின்றனர் இதனால் எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் நேரத்தில் கடல் அலைகள் சீற்றத்தால் குறைவான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    • மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பு குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக கடற்கரை கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்ற தகவல் பங்கு தந்தைகள் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் நாட்டுப் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று கடல் சீற்றமாகவும் காணப்பட்டது. ராட்சத அலைகள் வேகமாக எழும்பியது. கடற்கரை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர்கள் மீது வேகமாக மோதி சென்றது.

      விழுப்புரம்:

      விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது இதனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம், வானூர், மற்றும் கோட்டக்குப்பம் ஆரோவில்,ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மரக்காணம், கோட்டக்குப்பம், கூனி மேடு, மஞ்சக்குப்பம் பொம்மையார்பாளையம் ஆரோவில், ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.

      இதன் காரணமாக மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

      • கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
      • 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

      புதுச்சேரி:

      வங்கக்கடலில் ஏற்பட்டு ள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடல் 3வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

      இதனால், காரைக்காலிலி ருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால், பெரு ம்பாலுமான விசைப்ப டகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரை க்கால் அரசலாற்றின் கரையோ ரமும், மீனவ கிராம ங்களிலும் பாதுக்கா ப்பாக நிறுத்தி வைக்க ப்பட்டு ள்ளது. 3 -வது நாளாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க ப்பட்டுள்ளதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      • விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
      • அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      விழுப்புரம்: 

      மரக்காணம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மணல் திட்டு 5 மீட்டர் கரைந்து சென்றது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளையும் பைபர் படகு போன்றவை கரையில் நிறுத்தி வைக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அழகன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியார் குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், ரங்கநாதபுரம் குப்பம் போன்ற மீனவ கிராமங்களில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது

      கடந்த 30 ஆண்டு பிறகு தற்போது கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் கடலோரப் பகுதியில் வசிக்கும் விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே துறை சார்ந்த அதிகாரிகள இப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான உதவிகளை செய்ய அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      • கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
      • மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

      கடலூர்:

      வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.

      இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

      • மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
      • திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுக பகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது.

      கடலூர், நவ.20-

      வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. எனவே கடலில் 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். கடலின் சீற்றம் அதிகம் இருக்கும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை மற்றும் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. இன்று காலையிலும் தாழங்குடா, தேவனா ம்பட்டினம் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது.

      எனவே மீனவர்கள் கடற்கரையில் நிறுத்தியிருந்த படகுகளை டிராக்டர் மூலம் இழுத்து மேடான பகுதிக்கு கொன்டு சென்றனர். தொடர்ந்து கடல் சீற்றம் நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கடலோர கிராம மீனவர்கள் ஒருவித அச்சத்துடனே உள்ளனர். தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தைவிட கடல் சீற்றம் அதிகம் உள்ளது. எனவே போலீசார் அங்கு ரோந்து சென்று கடலில் யாரும் குளிக்கவேண்டாம் என்று எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடலூரில் உள்ள திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், துறைமுகபகுதி மீன் மார்க்கெட்டுகள் வெறி ச்சோடி காணப்பட்டது.

      ×