search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bathing ban"

      விழுப்புரம்:

      விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது இதனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம், வானூர், மற்றும் கோட்டக்குப்பம் ஆரோவில்,ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மரக்காணம், கோட்டக்குப்பம், கூனி மேடு, மஞ்சக்குப்பம் பொம்மையார்பாளையம் ஆரோவில், ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.

      இதன் காரணமாக மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

      பராமரிப்பு பணிகள் காரணமாக கும்பக்கரை அருவியில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
      பெரியகுளம்:

      தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல், அடுக்கம் பகுதிகளில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து இருக்கும்.

      இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சபரிமலை சீசன் காலத்தில் பக்தர்கள் நீராடி செல்கின்றனர். தற்போது அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.

      இருந்தபோதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுழலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதால் வனத்துறையினர் பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிக ஆழம் உள்ள இடங்கள் பாறைகள் ஆகிய இடங்களில் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவ்வப்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

      தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பணிகள் நடைபெறும். அதன் பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

      இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

      மாமல்லபுரம், கோவளம் கடலில் குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.
      மாமல்லபுரம்:

      பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. 17-ந் தேதி காணும் பொங்கலையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் குவியும் முக்கியமாக கோவளம், திருவிடந்தை, வடநெம்மேலி, பட்டிபுலம், தேவநேரி, மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் பயணிகள் கடலில் குளிப்பார்கள்.

      கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் ராட்சத அலை, புதைமணல்களில் சிக்கி 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க நாளை முதல் 17-ந் தேதி வரை போலீசார் தடை விதித்துள்ளனர்.

      மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே 700 மீட்டர் தூரத்திற்கு சவுக்கு மர தடுப்புகள் கட்டப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜு, இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவி, ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று முதல் ஈடுபட உள்ளனர்.



      கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
      பெரியகுளம்:

      தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் போது கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

      கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

      எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்தனர். தடைவிதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

      தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
      கூடலூர்:

      தேனி மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது.

      தென்மேற்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வரத்தொடங்கி உள்ளது. பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. வரத்து 270 கன அடியாகவும், திறப்பு 52 கன அடியாகவும் உள்ளது.

      வைகை அணையின் நீர்மட்டம் 36.61 அடியாக உள்ளது. வரத்து 6 கன அடியாகவும், திறப்பு 60 கன அடியாகவும் உள்ளது. மஞ்சளாறு நீர்மட்டம் 41 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி.

      பெரியாறு 3.4, தேக்கடி 2.8, கூடலூர் 1.5, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 1.2, வீரபாண்டி 18, வைகை அணை 5.4, மஞ்சளாறு 4, மருதாநதி 22, கொடைக்கானல் 28.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

      பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழையால் 26 கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தொடர் மழை காரணமாக கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பொதுமக்கள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.

      தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
      ×