search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sea Rage"

    • குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத் தில் உள்ள பல்வேறு கடல் பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கடல் அலைகள் சீற்றமாக காணப்பட்டன. சுனாமி காலத்தில் ஏற்பட்டது போன்று அலையின் வேகம் இருந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது.

    கொல்லங்கோடு இறையு மன்துறை பகுதியில் கடலில் எழுந்த ராட்சத அலைகள், தடுப்புச் சுவரை தாண்டியதால் கரையோரம் இருந்த வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் அச்சத்தில் சாலைக்கு வந்தனர். கடல் நீர், கரையோரம் இருந்த கல்லறை தோட்டங்கள் கடல் நீரால் சூழப்பட்டன. குளச்சல் கடற்கரையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அங்கு ராட்சத அலைகள் எழும்பியதை பார்த்த அவர்கள், அங்கிருந்து அவரச அவசரமாக பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றனர். அவர்கள் அமர்ந்திருந்த மணல்பரப்பு வரை கடல் நீர் வந்து சென்றது. சிலர் அதில் கால் நனைத்து மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரியிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் விரைந்து செயல்பட்டு சுற்றுலா பயணிகளை கடற்கரை பகுதியில் இருந்து வெளியேற்றினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் குமரி மாவட்ட கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் கடலோரப் பகுதிகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக் கடல், வங்கக்கடல் ஆகிய 3 கடல்களும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தன. சுமார் 10அடி முதல் 15 அடி உய ரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்து பாறைகளில் முட்டி மோதி சிதறிய காட்சி பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது.

    கடல் சீற்றம் காரணமாக நேற்று மதியம் நிறுத்தப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து இன்று காலையும் ரத்து செய்யப்பட்டே இருந்தது. காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக படகு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், கடல் சீற்றம் தணிந்த பிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்றனர்.

    குளச்சல் கடலில் எழுந்த ராட்சத அலைகள், மணற் பரப்பில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 10 பைபர் வள்ளங்களை இழுத்து சென்றதால் அவை சேதமடைந்தன. ஒரு சில கட்டுமரங்களையும் காணவில்லை என மீனவர்கள் கூறினர்.

    • மோக்கா புயல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது.
    • புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல் அதி தீவிர புயலாக மாறியது. போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 610 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையைக் கடக்கும் என அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடலூர் துறைமுகத்தில் தூர புயல் எச்சரிக்கை விதமாக 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மேலும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சுப உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் பெரும்பாலான மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் ஒரு சில மீனவர்கள் பைபர் படகு மற்றும் கட்டுமரத்தில் அரசு நிபந்தனைக்குட்பட்டு மீன்பிடித்து வந்தனர். தற்போது வழக்கத்தை விட கடல் சீற்றம் மற்றும் கடல் பகுதியில் அதிகளவில் காற்று வீசப்பட்டு வருவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் கடலோர பகுதிகளில் எந்த வித அசம்பாவதமும் ஏற்படாத வண்ணம் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.
    • கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை.

    குளச்சல்:

    குளச்சல் கடல் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு கடல் சீற்றமும் காணப்பட்டு வந்தது.

    தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடுகள் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் குமரிக்கடல் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசி வந்த நிலையில் இன்று கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது

    இதனால் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பைபர் படகு மற்றும் விசைப்படகு. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் மற்றும் பைபர் வள்ளங்களை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

    இன்று கரை திரும்பிய விசைப் படகுகளில் இருந்து மீன்கள் அதிகம் கிடைக்கவில்லை. மேலும் வள்ளங்கள் மூலமும் அதிகமான மீன்கள் கிடைக்க வில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

    • கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து சென்றது,.
    • தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை

    கடலூர்:

    சில மாதங்களாக தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி கடல் சீற்றம், திடீர் மழை போன்றவை நிகழ்கிறது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியாகிறது. கடல் அலை முன்னோக்கி அதிக அளவில் வந்து செல்வதால் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களில் படகுகளை நிறுத்தி செல்கின்றனர்

    மேலும், கடலூர் தாழங்குடா முதல் தேவனாம்பட்டினம் வரை கடற்கரை ஓரமாக பாதுகாப்பு கருதி நடப்பட்டிருந்த சவுக்கு மரங்கள் கடல் அலை சீற்றம் காரணமாக அடித்து செல்கிறது.இந்நிலையில் கடலில் அலைகள் வழக்கத்தை விட சீற்றம் அதிகமாக இன்று காலை முதல் காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக தற்போது கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்படுவதால் சீல்வர் பீச்சிற்கு வரும் பொதுமக்களை கடலோரம் அனுமதிக்கவில்லை. மேலும், போலீசார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட காரணத்தினால் பரபரப்பாக காணப்பட்டது.

    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருகிறது.
    • கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    இதனால், காரைக்காலில் இருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லா ததால், பெரும்பாலுமான விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றின் கரையோரமும், மீனவ கிராமங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை.

    சீர்காழி:

    சீர்காழி அருகே புது குப்பம் மீனவ கிராமத்தில் சுமார் 164 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பருவநிலை மாறுபாடு மற்றும் அவ்வப்போது ஏற்படும் கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என மீனவ கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதன்படி ரூ.9 கோடி மதிப்பீட்டில் மீன்வளத் துறை சார்பில் கடற்கரை ஓரங்களில் தடுப்பு சுவர் மற்றும் மீன் உலர் தளம் ரூ.9 கோடி மதிப்பீட்டில் கருங்கற்கல் கொட்டும் பணி, வலை பின்னும் கூடம், அனுகு சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா புதுகுப்பம் மீனவர் கிராமத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார்.

    நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    இதில் காவிரி பூம்பட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து.மகேந்திரன், நிர்வாகிகள் ஜி.என்.ரவி, பழனிவேல், மீன்வளத் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மீன்வளத்துறை உதவி செயற் பொறியாளர் ரபீந்திரநாத், உதவி பொறியாளர் சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
    • மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

    கடலூர்:

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் சீற்றத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கடலூர் துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட் களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுக்கு தேவையான மீன்களை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் மீன் வரத்து மிக மிக குறைந்த காரணத்தினால் மீன் வியாபாரிகள் குறைந்த அளவு மீன்கள் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதன் காரணமாக இன்று காலையில் இருந்து மீன்கள் வாங்குவதற்கு பொது மக்கள் இல்லாததால் வெறி ச்சோடி காணப்பட்டது. மேலும் குறைந்த அளவு இருந்த மீன்களும் சரியான முறையில் விற்பனையாகாததால் மீன் வியாபாரிகள் சோக த்துடன் காணப்பட்டனர். மேலும் மீன்வரத்து குறைவானதால் தற்போது இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சென்று தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி சென்றதும் காண முடிந்தது.

    • விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
    • அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்தினால் மணல் திட்டு 5 மீட்டர் கரைந்து சென்றது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளையும் பைபர் படகு போன்றவை கரையில் நிறுத்தி வைக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அழகன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியார் குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம், ரங்கநாதபுரம் குப்பம் போன்ற மீனவ கிராமங்களில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது

    கடந்த 30 ஆண்டு பிறகு தற்போது கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் கடலோரப் பகுதியில் வசிக்கும் விழுப்புரம் மாவட்டம 19 கிராம மீனவர்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே துறை சார்ந்த அதிகாரிகள இப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்து அதற்கான உதவிகளை செய்ய அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

      விழுப்புரம்:

      விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது இதனால் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம், வானூர், மற்றும் கோட்டக்குப்பம் ஆரோவில்,ஒட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது. குறிப்பாக மரக்காணம், கோட்டக்குப்பம், கூனி மேடு, மஞ்சக்குப்பம் பொம்மையார்பாளையம் ஆரோவில், ஆகிய பகுதிகளில் கடல் மிகவும் சீற்றமாக காணப்படுகிறது.

      இதன் காரணமாக மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களது படகுகளை கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அது மட்டும் அல்லாமல் ஆரோவில் கடற்கரைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு கடற்கரையில் குளிக்க காவல்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

      • பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.
      • பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

      வேதாரண்யம்:

      நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது.

      பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

      கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2 நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை .

      ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

      இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

      நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

      மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன. 

      ×