காரைக்காலில் தொடர்ந்து கடல் சீற்றம் 15 ஆயிரம் மீனவர்கள் 4-வது நாளாக கடலுக்குள் செல்லவில்லை

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருகிறது.கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது.
அரசலாற்றங்கரை ஓரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள காட்சி.
அரசலாற்றங்கரை ஓரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள காட்சி.
Published on

புதுச்சேரி:

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வலுவடைந்து வருவதால், கடலோர கிராமங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கடல் இன்று 4 -வது நாளாக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் விசை மற்றும் பைபர் படகு மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால், காரைக்காலில் இருந்து மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்லா ததால், பெரும்பாலுமான விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக கட்டிவைக்கப்பட்டுள்ளது. பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றின் கரையோரமும், மீனவ கிராமங்களிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com