என் மலர்
நீங்கள் தேடியது "panchalinga falls"
- நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது.
- வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மையத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேற்குத்தொடர்ச்சிமலை பகுதியான திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் மூலிகைகள் கலந்து குளிர்ந்த நீராக விழும் அருவியில் குளித்து மகிழ பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர்.
நடப்பாண்டு கோடை மழை பொழிவு குறைந்ததால், மலைப்பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதனால் கடந்த 3 மாதமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தோணியாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு பஞ்சலிங்க அருவியில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. வறண்டு காணப்பட்ட அருவியில் ஆர்ப்பரித்து நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.
- வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.
உடுமலை:
உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களில் கோவில் விழாக்களும், கும்பாபிஷேகமும் பரவலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதல் நிகழ்ச்சியாக திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க சொல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலம் முடிவடைந்தும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை.
மாறாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், பொதுமக்கள் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதி உள்ள சின்னாற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்கின்றனர்.
அதன் பின்பு குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கட்டளை மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து பின்பு ஊர்வலமாக கிராமங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.ஆனால் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு ஞாயிறு,செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது.இதனால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களால் தீர்த்தம் எடுக்க முடிகிறது. பயண நேரம், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.
ஆனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்கு இதுபோன்று கட்டுப்பாடுகள் கிடையாது.எப்போது வேண்டுமானாலும் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வரலாம்.இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அருவியில் நீர்வரத்து ஏற்பட்டால் விழாக்கள் மேலும் சிறப்பு அடையும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
- தென்மேற்கு பருவமழை தொடங்குவதிலும் தாமதம் நிலவி வருகிறது.
- சுற்றுலா பயணிகள் அதிகம் வராததால் திருமூர்த்திமலையில் உள்ள குரங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
தளி:
உடுமலை வனச்சரகத்தில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு முற்றிலுமாக நீர்வரத்து குறைந்து விட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதிலும் தாமதம் நிலவி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்காக வருகின்ற சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.இதன் காரணமாக அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.
அதைத் தொடர்ந்து அணை அருகே உள்ள நீச்சல் குளத்துக்கு செல்லும் பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்கின்றனர். இதனால் நீச்சல் குளத்தில் ஓரளவுக்கு கூட்டம் இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் வராததால் திருமூர்த்திமலையில் உள்ள குரங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.
- தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
- சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ள இப்பகுதிக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் பஞ்சலிங்க அருவியில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் இருந்து மூலிகை குணங்களுடன் விழும் அருவியில் நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். நடப்பு ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களைகட்டி உள்ளது.
- திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது.
- மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது
உடுமலை :
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் என ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக அப்பகுதி உள்ளது.
பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருமூர்த்திமலையில் சீசன் துவங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளிலிருந்து மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.நடப்பு ஆண்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களை கட்டி உள்ளது.
- பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது
- இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலை பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது.இம்மலை மேல் வனப்பகுதியில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இந்து அறநிலையத் துறையின் கீழ் அமணலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் பஞ்சலிங்க அருவியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.கழிப்பிடம், பெண்க ளுக்கான உடை மாற்றும் அறை மற்றும் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த 2008ல் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 13 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.அப்போதைய தி.மு.க., அரசு சார்பில் அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உறுதியளிக்கப்பட்டது.பஞ்சலிங்க அருவி மற்றும் அடிவாரத்திலுள்ள கோவிலைச்சுற்றிலும் 50 ஏக்கர் நிலத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைக்கவும் கோரிக்கை எழுந்தது. ஆனால் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.
கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், திருமூர்த்திமலை மற்றும் பஞ்சலிங்க அருவி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த போதிய இடமில்லை. பல முறை கருத்துரு அனுப்பியும், வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ளது என்றனர்.தமிழக அரசு வனத்துறை இடத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒதுக்கீடு செய்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.
- அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்ததுடன் குடும்பத்தோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
- குழந்தைகள் பெரியோர்கள் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
உடுமலை :
ஆங்கில புத்தாண்டையொட்டி உடுமலை அமண லிங்கேஸ்வரர் கோவிலில் மும்மூர்த்திகள், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகங்கள், சப்தகன்னியருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.அதில் கலந்து கொள்வதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கார், வேன்,பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்தனர்.
சபரிமலை சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.பின்னர் அனைவரும் அருவிக்கு சென்று குளித்து மகிழ்ந்ததுடன் குடும்பத்தோடு செல்பி மற்றும் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.இதையடுத்து அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு மும்மூர்த்திகள் உள்ளிட்ட அனைத்து கடவுள்களையும் சாமி தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து அணைப் பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு அமர்ந்து ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அணைப்பகுதி,பஞ்சலிங்க அருவி மற்றும் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டமும் வாகன நெரிசலும் ஏற்பட்டது.அதை சீரமைப்பதற்கு போலீசார் முன்வராததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானார்கள்.
மேலும் வாகன நெருக்கடி காரணமாக அரசு பஸ்களில் கோவிலுக்கு வருகை தந்த பொதுமக்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் முன்பாக இறக்கி விடப்பட்டனர்.இதனால் குழந்தைகள் பெரியோர்கள் வெயிலின் தாக்கத்தால் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பஞ்சலிங்கஅருவி உள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சிமலைகளில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, வண்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிபட்டிஆறு, உப்புமண்ணம்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது.
பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்வதற்காகவும் இயற்கை சூழலை ரசிப்பதற்காகவும் நாள்தோறும் ஏராளமான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் மேற்கு தொடர்ச்சிமலைகளில் வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக அருவிக்கு வந்துகொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்று விட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வனப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வனப்பகுதியை நீராதாரமாகக் கொண்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீராதாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதனால் அருவியின் நீர்வரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதுடன் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அருவி பகுதி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.