search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெயிலில் இருந்து தப்பிக்க பஞ்சலிங்க அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
    X

    சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் காட்சி.

    வெயிலில் இருந்து தப்பிக்க பஞ்சலிங்க அருவிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

    • திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது.
    • மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது

    உடுமலை :

    உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் 960 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கம் அருவி உள்ளது. மேலும் மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஓரிடத்தில் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் என ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக அப்பகுதி உள்ளது.

    பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருமூர்த்திமலையில் சீசன் துவங்கியுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளிலிருந்து மூலிகை குணங்களுடன் விழும் பஞ்சலிங்க அருவியில், நீர்வரத்து திருப்தியாக உள்ளது. சுற்றுலா பயணிகள் குளிர்ச்சியாக விழும் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.நடப்பு ஆண்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் திருமூர்த்திமலையில் சீசன் களை கட்டி உள்ளது.

    Next Story
    ×