என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செந்தூர் கடல்"

    • பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.
    • நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் முன்பு உள்ள கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது சீற்றத்துடனும், உள்வாங்கியும் காணப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது.

    கடல் உள்வாங்கி காணப்பட்டதால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவில் வெளியே தெரிந்தன.

    இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் பாறைகளின் மீது நின்று செல்பி எடுப்பதும், புகைப்படம் எடுத்தும் ரசித்து மகிழ்ந்தனர்.

    இதற்கிடையே கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும்
    • கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

    திருச்செந்தூரிர் சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும், முருகனிடம் முன் வைத்த வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கலியுகத்திலும் பல அதிசயங்களை பக்தர்களின் வாழ்வில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் நடத்தி வருவதால் இங்கு வருடத்தின் அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது.

    திருச்செந்தூரில் உள்ள மிக முக்கியமான இடம், கோவிலுக்கு எதிரில் உள்ள நாழிக்கிணறு. இங்கு நீராடினாலே நம்முடைய பாவங்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் கோவிலுக்கு தெற்கு புறம் உள்ள நாழிக்கிணற்றில் நீராடி விட்டு, பிறகு கடலில் சென்று நீராடி விட்டு, முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில் கோவிலை சுற்றி 24 தீர்த்தங்கள் இருந்ததாகவும், பிறகு மணலால் மற்ற தீர்த்தங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது நாழிக்கிணறு மட்டுமே இங்கு உள்ளதாகவும் தல புராணம் சொல்கிறது.

    இந்த நாழிக்கிணற்றிற்கு, கந்த தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. அதாவது முருகப் பெருமான் தன்னுடைய திருக்கை வேலால் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சதுரடி பரப்பும், 7 அடி ஆழமும் கொண்ட இந்த தீர்த்தம் பெரிய கிணற்றுக்குள் ஒரு சிறிய கிணறு இருப்பது போன்ற அமைப்பில் இருக்கும்.

    கடலுக்கு மிக அருகிலேயே இருந்தும் இந்த தீர்த்தத்தின் தண்ணீர் உப்புக்கரிப்பது கிடையாது. மிகவும் சுவை தன்மை கொண்டதாகவும், எந்த காலத்திலும் வற்றாமலும் இருக்கும் இந்த தீர்த்தம் மிகப் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இந்த கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்நிலையில் திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்கீழ் நாழிக்கிணறு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    • கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது.
    • கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு வருவதும் இயல்பாக உள்ளது. இந்த நாட்களில் கடல் சுமார் 50அடியில் இருந்து 100 அடி தூரம் உள்வாங்கி காணப்படும் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரியும். ஆனால் கந்த சஷ்டி திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை திருச்செந்தூர் கடல் இயல்பு நிலையை விட சற்று கூடுதலாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் குறைவான பக்தர்களே புனித நீராடுகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் இன்று 4-வது நாளாக சீற்றம் காணப்பட்டது.

    கடும் சீற்றத்துடன் சுமார் 10 அடி தூரம் வெளியே வந்து செல்கிறது. இதனால் பக்தர்கள் தயங்கியவாறு புனித நீராடி வருகின்றனர் இதனால் எப்போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் நேரத்தில் கடல் அலைகள் சீற்றத்தால் குறைவான பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    • கடலானது அடிக்கடி உள்வாங்கி காணப்படுவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
    • பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

    இந்த கோவில் கடலானது அடிக்கடி உள்வாங்கி காணப்படுவதும், சீற்றத்துடன் காணப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவில் கடலானது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக உள்வாங்குவதும், சில மணி நேரங்களுக்கு பின்னர் சீற்றத்துடனும் காணப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று கோவில் கடலானது சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் பாறையில் மீது ஏறி நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    • பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
    • கோவில் அருகில் பக்தர்கள் புனித நீராடும் இடத்தில் மட்டும் இயல்பான நிலையில் உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கடல் பொதுவாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட் களில் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பாக நடந்து வருகிறது.

    அந்த வகையில் பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதி அருகே சுமார் 60 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. அதன்மீது பக்தர்கள் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுகிறது. ஆனால் கோவில் அருகில் பக்தர்கள் புனித நீராடும் இடத்தில் மட்டும் இயல்பான நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் எந்தவித அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர். 

    • பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
    • பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் கோவில் கடலானது அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சில மணி நேரங்கள் உள்வாங்கி காணப்படுவதும், பின்னர் இயல்பு நிலை திரும்புவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

    இன்று அமாவாசை என்பதால் கோவில் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பச்சை நிற பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

    கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சியளித்தது. பச்சை நிறத்தில் எழில் மிகு தோற்றத்தில் காட்சியளித்த பாறைகளை பக்தர்கள் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் பக்தர்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.
    • திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

    பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் அமாவாசை முடிந்து 6 நாட்கள் ஆகியும் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளி வருவதுமாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து100அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது. ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.

    • அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 60 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் உள்வாங்கி காணப்படுகிறது.

    பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் இன்று அமாவாசை தொடங்கி நாளை வரை உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து 100அடி வரை உள்வாங்வதும் வெளியே வருவதுமாக உள்ளது.

    ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.

    • இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது.
    • பக்தர்கள் நீராடும் இடத்தில் பக்தர்கள் எந்தவிதமான அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூரில் கடல் வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பும் அல்லது ஓரிரு நாட்களுக்கு பிறகும் கடல் உள்வாங்குவதும், வெளிவருவதும் இயல்பான ஒன்றாகும்.

    இன்று சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று திருச்செந்தூர் கடல் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இன்று 2-வது நாளாக கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கு வதும், சில நேரங்களில் வெளியே வருவதுமாக இருந்து வருகிறது. ஆனாலும் வழக்கமாக பக்தர்கள் நீராடும் இடத்தில் பக்தர்கள் எந்தவிதமான அச்சமின்றி புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் திருச்செந்தூர் கோவில் கடற்கரைக்கும் இடையே உள்ள பகுதியில் சுமார் 60-ல் இருந்து 70 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது.

    கோவிலுக்கு வந்த இளைஞர்கள், பக்தர்கள் அந்தப் பாறையின் மீது நின்று விளையாடுவதும், செல்பி எடுத்து மகிழ்வதுமாக உள்ளனர்.

    • அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம்.
    • இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

    இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    இந்தக் கோவிலில் திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் இன்று கோவில் கடலானது சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடலில் அலைகள் இல்லாமல் குளம் போல் காட்சியளித்தது. இதனால் பாறை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.

    அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவதும் வழக்கம்.

    ஆனால் இன்று திடீரென கடல் உள்வாங்கியது கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுமுறை தினத்தால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம்.

    கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

    மேலும், கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    • பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.
    • கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. அதேபோல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியும் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

    மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கமாக கோவில் கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சுமார் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.

    இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது . இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பார்த்து பக்தர்கள் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.

    ×