சுமார் 50 அடி தூரத்திற்கு திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது

பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது.
சுமார் 50 அடி தூரத்திற்கு திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. அதேபோல் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியும் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.

மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் வழக்கமாக கோவில் கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சுமார் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.

இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது . இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பார்த்து பக்தர்கள் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com