திருச்செந்தூர் கடல் 60 அடி உள்வாங்கியது

அமாவாசை தினம் என்பதால் கடல் சுமார் 60 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.
திருச்செந்தூர் கடல் 60 அடி உள்வாங்கியது
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று காலையில் இருந்து சுமார் 60 அடிக்கு மேல் உள்வாங்கி காணப்படுகிறது.

பொதுவாக திருச்செந்தூர் கடல் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்குவதும், வெளியே வருவதும் இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் இன்று அமாவாசை தொடங்கி நாளை வரை உள்ளது.

இந்த நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் கடல் சுமார் 60 அடியில் இருந்து 100அடி வரை உள்வாங்வதும் வெளியே வருவதுமாக உள்ளது.

ஆனாலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் இறங்கி புனித நீராடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com