search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bath"

    • தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
    • பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.

    வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.

    கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.

    மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.
    • தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது.

    காங்கயம்:

    முத்தூர் அருகே வள்ளியரச்சல் அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பவானிசாகர் அணையில் இருந்து கடந்த 19-ந்தேதி முதல் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து செல்கிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • கோரையாற்றில் மக்கள் உற்சாக குளியல் போட்டனர்.
    • குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்

    பெரம்பலூர்

    காணும் பொங்கலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் சிலர் தங்களது நண்பர்கள், உறவினர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சிறுவர் அறிவியல் பூங்காவில் நேற்று மாலை கூடி பொழுதை கழித்தனர். அதில் குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை, சாத்தனூர் கல்மரப்பூங்கா, விசுவக்குடி அணை, கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கம், கோரையாறு உள்ளிட்ட இடங்களில் காணும் பொங்கலையொட்டி பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர்.

    விசுவக்குடி அணை, கோரையாற்றில் பொதுமக்கள் உற்சாக குளியலிட்டனர். மேலும் அந்த இடங்களில் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அந்த இடங்களில் நேற்று வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதே போல் பெரம்பலூரில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் படம் பார்க்க கூட்டம் நிரம்பி வழிந்தது.


    • மதியம் 3 மணி அளவில் ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
    • அவரை பரிேசாதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலகண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மகன் சிவா. கூலித்தொழிலாளி.

    இவருக்கும், திருத்துறைப்பூண்டி தாலுகா ஓவரூரை சேர்ந்த ரகுபதி மகள் சுகந்திக்கும்(வயது22) கடந்த 23-6-2022 அன்று திருமணம் நடைபெற்றது.

    நேற்று மதியம் 3 மணி அளவில் சுகந்தி ஊருக்கு அருகில் உள்ள அய்யனார் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சுகந்தியை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிேசாதனை செய்த டாக்டர்கள் சுகந்தி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் ஆற்றில் மூழ்கி புதுப்பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
    • தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

    உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல்.
    சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, குளியல். சிலர், சுத்தமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் எனப் பல மணி நேரம் குளியல் அறையிலேயே தவம் இருப்பார்கள். உண்மை அதுவல்ல. சில நிமிடங்கள் குளித்தாலுமேகூட மேனியைப் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

    குளிர் காலங்களில் வெந்நீரில் குளிப்பதும், வெயில் காலங்களில் குளிர்ந்த நீரில் குளிப்பதும் உடலுக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம் ஆனால், அவை நம் சருமத்தைப் பாதிக்கும். இரண்டுமே நம் சருமத்திலுள்ள ஈரப்பதத்தை நீக்கி, வறட்சியாக்கிவிடும். வெதுவெதுப்பான நீரில் குளிப்பது மட்டுமே உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும்.

    சிலர் அதிக நேரம் குளித்தால்தான் உடல் சுத்தமாக இருக்கும் என நினைப்பார்கள். இது, தவறான நம்பிக்கை. உடலில் சுரக்கும் எண்ணேய் நம் சருமத்தைப் பாதுகாக்கக்கூடியது. அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே, 5 முதல் 10 நிமிடங்கள் மட்டும் குளிப்பதே போதுமானது. சோப்பு மற்றும் ஷாம்பூ போடும்போது ஷவரை திறந்துவைக்கக் கூடாது. இதனால் மேனியையும் பாதுகாக்கலாம்; தண்ணீரையும் சேமிக்கலாம்.

    தலையில் அழுக்குப் படியாமல் இருப்பதற்கும், தலைமுடியை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கும் தலை மற்றும் முடியின் வேர்களில் மட்டும் ஷாம்பூவைப் பயன்படுத்தினால் போதுமானது. கண்டிஷனரை முடிகளில் மட்டும் தடவுவதால், முடி வறட்சி அடையாமல் பாதுகாக்கப்படும். மாறாக, இதைத் தலையில் தேய்த்தால், தலை எண்ணெய்ப் பசையோடு இருக்கும்; அழுக்கு படிவதற்கும் வழிவகுக்கும்.

    அதிக நுரை தரும் சோப்பு நம் சருமத்தை வறண்டதாக மாற்றிவிடும். சோப்பைத் தேர்ந்தெடுக்கும்போது, அதில் ரசாயனப் பொருட்கள் குறைந்த அளவில் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். கூடுமானவரைக்கும் ஆர்கானிக் சோப் அல்லது உடலின் எண்ணெய்ப் பசையைப் பாதுகாக்கும் சோப்பைப் பயன்படுத்துவது நல்லது.

    உடலில் உள்ள அழுக்குகளையும் கிருமிகளையும் நீக்க ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். குளித்து முடித்ததும் ஸ்க்ரப்பரை நன்கு அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும் அல்லது புதிய ஸ்க்ரப்பரைப் பயன்படுத்தலாம். ஆனால், அதிக அளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உண்மையில் இயற்கையான ஸ்க்ரப்பர் என்பது நம் கைகளே; அவை பாதுகாப்பானதும்கூட.

    குளித்து முடித்ததும் உடலில் உள்ள ரோமங்கள் சுத்தமாகவும் மிருதுவாகவும் இருக்கும். அப்போது ஷேவ் செய்வதும் சுலபமாக இருக்கும்.

    குளித்த பிறகு, உடலை, தூய்மையான துண்டால் துடையுங்கள். அழுத்தித் துடைக்காமல், மிருதுவாகத் துடையுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துண்டை துவைப்பது கிருமிகள் உங்கள் உடம்பில் தொற்றிக்கொள்ளாமல் பாதுகாக்கும்.

    குளித்துவிட்டு, உடலைத் துவட்டியதும் கட்டாயமாக பாடி லோஷனைத் தடவ வேண்டும். இது, நாள் முழுவதும் உடலின் ஈரப்பதத்தைத் தக்கவைத்திருக்கும். இயற்கையான தேங்காய் எண்ணெய் அல்லது அவகேடோ எண்ணெயை நான்கு முதல் ஐந்து சொட்டுக்களை உள்ளங்கையில் எடுத்து, நன்கு தேய்த்துத் தடவிக்கொள்ளலாம்.

    இதை தினசரி பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் சருமம் என்றும் இளமை மிளிர ஜொலிக்கும்!

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தர்மபுரி:

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடுத்துள்ள கண்டித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சண்முகநாதன் (வயது 32). இவர் குறும்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் சண்முகநாதன் ஒகேனக்கல்லுக்கு சுற்றிப் பார்க்க சென்றார். 

    அப்போது ஒகேனக்கல் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் நண்பர்களுடன் அதிகாலை 3 மணி அளவில் குளித்துக் கொண்டிருந்த சண்முகநாதன் ஆழமான பகுதிக்குச் சென்றார். ஆனால் சண்முகநாதனுக்கு நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைத் தொடர்ந்து பரிசல்கள் மூலம் சண்முகநாதனின் உடலை போலீசார் தீவிரமாக தேடினர்.

    பின்னர், காலை 11 மணியளவில் இறந்த நிலையில் சண்முகநாதனின் உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒகேனக்கல் போலீசார் அவரது உடலை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்த சண்முகத்தின் மாமா ஆறுமுகம் எனது மருமகன் சண்முகத்தின் சாவில் சந்தேகம் இல்லை என தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை வழங்குவதற்கான மேற்படி, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
    மதகடிப்பட்டு அருகே விவசாய கிணற்றில் குளித்த பிளஸ்-2 மாணவர் நீரில் மூழ்கி பலியானார்.

    திருபுவனை:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன். இவர், தமிழக போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது மகன் தணிகைவேலன் (வயது 17). இவர், பி.எஸ்.பாளைத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் தணிகைவேலன் தனது நண்பர்களுடன் மதகடிப்பட்டையொட்டி தமிழக பகுதியான எல்.ஆர். பாளையத்தில் முருகையன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

    இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு கிணற்றில் இருந்து வெளியேறிய நிலையில் தணிகைவேலன் மட்டும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரது நண்பர்கள் அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர். விவசாயிகள் கிணற்றில் இறங்கி தேடியும் தணிகைவேலனை மீட்க முடியவில்லை.

    இதையடுத்து இதுபற்றி வளவனூர் போலீசாருக்கும், விழுப்புரம் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தீவிர தேடுதல் வேட்டையில் தணிகைவேலனை பிணமாக மீட்டனர்.

    இதைத்தொடர்ந்து வளவனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×