தாராபுரம் மேம்பாலத்தில் இருந்து கொட்டிய நீரில் குளியல் போட்ட போதை ஆசாமி

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.
குளியல் போட்ட போதை ஆசாமியை படத்தில் காணலாம்.
குளியல் போட்ட போதை ஆசாமியை படத்தில் காணலாம்.
Published on

 திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக, வளிமண்டல மேற்கு திசை காற்று வேக மாறுபாட்டின் காரணமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கன மழை பெய்தது.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.ஏரிப்பாளையம்,தளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த நிலையில் நேற்று மாலை தாராபுரம் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.அப்போது தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக உள்ள மதுபானக் கடையில் இருந்து மது அருந்திய நிலையில் வெளியே வந்த "மதுப்பிரியர்" ஒருவர்,மழை பெய்வதை பார்த்தவுடன் சுமார் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே அருவி போல் கொட்டிக் கொண்டிருந்த தண்ணீரில் அமர்ந்தபடி, போதையில் என்ஜாய் செய்ய ஆரம்பித்தார்.

தொடர்ந்து அவர் சிறிது நேரம் அமர்ந்தபடி நடன ஆக்சன்களை செய்தபடி மழையில் நனைந்தபடி இருந்ததை,அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com