என் மலர்

  செய்திகள்

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய வாலிபர் பலி
  X

  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
  தர்மபுரி:

  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அடுத்துள்ள கண்டித் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் சண்முகநாதன் (வயது 32). இவர் குறும்படம் எடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று நண்பர்களுடன் சண்முகநாதன் ஒகேனக்கல்லுக்கு சுற்றிப் பார்க்க சென்றார். 

  அப்போது ஒகேனக்கல் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் நண்பர்களுடன் அதிகாலை 3 மணி அளவில் குளித்துக் கொண்டிருந்த சண்முகநாதன் ஆழமான பகுதிக்குச் சென்றார். ஆனால் சண்முகநாதனுக்கு நீச்சல் தெரியாததால் மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைத் தொடர்ந்து பரிசல்கள் மூலம் சண்முகநாதனின் உடலை போலீசார் தீவிரமாக தேடினர்.

  பின்னர், காலை 11 மணியளவில் இறந்த நிலையில் சண்முகநாதனின் உடல் மீட்கப்பட்டது. மேலும் ஒகேனக்கல் போலீசார் அவரது உடலை பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்த சண்முகத்தின் மாமா ஆறுமுகம் எனது மருமகன் சண்முகத்தின் சாவில் சந்தேகம் இல்லை என தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

  மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை வழங்குவதற்கான மேற்படி, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
  Next Story
  ×